கோ...கோ... கொரோனா

                        கோ...கோ..  கொரோனா


கோ...கோ....கொரோனா
 டோன்ட் டச் மீ ....கோன்னா    

 பாடல் கேட்டு
 எட்டிப் பார்த்தேன்
  சுட்டிச் சிறுவர் இருவர்
 குட்டிக்கவசம் அணிந்து
  எட்டடி தொலைவில்  
 மெட்டோடு பாடிச் சென்றனர்
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்
வீட்டில் இருந்த சீனப்பொருட்களும் 
தங்களுக்குள் சிரித்துக் கொண்டன
               
 தொடாதே ..தொடாதே...
கட்டிப் பிடிக்க வந்த சுட்டித் தம்பியை
எட்டடி தூரத்தில் நிற்க வைத்த அக்கா 
   
 சாப்பிடாதே... சாப்பிடாதே...
 அக்கா கை கழுவாமல் சாப்பிடுகிறாள்
  புகார் பத்திரம் வாசிக்கும் தம்பி
               
 வாங்க...வாங்க...
 கை கொடுக்க வந்த எதிர் வீட்டு மாமாவை
  கைகூப்பி வரவேற்ற அப்பா
       
வேண்டாம்...வேண்டாம்...
  மறுத்து வந்த வீட்டுச் சாப்பாட்டை
   மறுபரிசீலனை செய்த அண்ணன்
             
   கை கழுவு ...கை கழுவு...
    வெளியில் சென்று வந்ததும்  
     வரவேற்பு செய்தி வாசிக்கும் அம்மா

     குட்பை ...குட்பை..
     கை கொடுக்கும் கலாச்சாரத்திற்கு 
      குட்பை கூறும் மேற்கத்திய நாடுகள்

       வணக்கம்...வணக்கம்...
       கை கூப்பி வரவேற்கும் இந்தியருக்கு
       வாயார வாழ்த்துரை வழங்கும் டிரம்ப்
         
       வீதி எங்கும் முகமூடி கொள்ளையர்
        பீதியை கிளப்பி விட்டுவிட்டு
       தேதி குறிப்பிடாமல் அலையும் வைரஸ்
      
      ஓதி ஓதி காதுகளை 
      மரத்துப்போக செய்த
      டெலிபோன் காலர்டியூன்
               
      அப்பப்பா எங்கெங்கு திரும்பினும்
       துரத்தும் கொரோனா
        தடுமாறும் மனித இனம்
                
      ஒட்டு மொத்த உலகுக்கே
      விடுக்கப்பட்ட சவாலா   
      இந்த கொரோனா!
              
       கோ...கோ...  கொரோனா
        டோன்ட் டச் மீ ... கோன்னா
       பள்ளிகளின் ரிங்டோன்  இனி இதுதானா!
      
       

       
       

Comments

Post a Comment

Popular Posts