சங்கத்தமிழ் மூன்றும் தா

சங்கத்தமிழ் மூன்றும் தா 


எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர்

இறைவனைத் தொழுவது நமது வழக்கம்.

ஔவை மட்டும் இதற்கு விதிவிலக்காக என்ன?

நாம்,நம் தொழில் நன்றாக நடக்க வேண்டும்.

படிப்பில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்க வேண்டும்.

நல்ல வேலை கிடைக்க வேண்டும்.

நோய்நொடி இல்லாத

நலமான வாழ்வைத் தர வேண்டும்

என்று கேட்போம்.

நல்ல அறிவைக் கொடு என்று கேட்போம்.

கீர்த்தியும் புகழும் வந்து சேரட்டும் என்று கேட்போம்.


ஔவையும்

தனது நல்வழி பாடல்களை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக  இறைவனை வணங்கினார். 

வழங்குவதோடு மட்டுமல்லாமல் இறைவனிடம் ஒரு கோரிக்கையும் வைக்கிறார்.

அப்படி என்று தேவை 

ஔவைக்கு இருந்தது.?


வயிறார உண்ண நல்ல  உணவு வேண்டும்

என்று கேட்டாரா?

இல்லை.


அவர் வைத்த கோரிக்கை 

என்ன தெரியுமா?"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா.


என்று கேட்கிறார்.


நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா

என்பது ஔவையின் கோரிக்கை.


"உயிர்களுக்கு நல்லது செய்யும்

யானை முகத்தானாகிய 

குற்றமற்ற விநாயக பெருமானே!


பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன்,.


 நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற சங்கத் தமிழ் மூன்றையும் தருவாயாக "

என்று கேட்கிறார்.


கூழுக்காகப் பாடியவர் என்று கூறுவர்.

கூழுக்காகப்  பாடுபவர்  எனக்கு அறுசுவை உணவு வேண்டும் என்றல்லவா கேட்க வேண்டும்.

ஆனால் ஔவை அப்படி கேட்கவில்லை.

தனது பாடல்கள் தரமானதாக இருக்க வேண்டும்.

அதில் இலக்கிய நயம் இருக்க வேண்டும்.

ஓசை நயம் மிகுந்திருக்க வேண்டும்.

உள்ளத்தோடு உரையாடி

சொல்லால் பிணிக்கும் அழகு இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

அதனால்தான் எனக்கு சங்கத்தமிழ்

மூன்றும் தா என்று கேட்கிறார்.

அருமையான வேண்டுதல் இல்லையா?


 

Comments

Popular Posts