பாய்தூஜ் தீபாவளி


பாய் தூஜ் தீபாவளி


பாய் தூஜ் என்பது  வடஇந்திய மாநிலங்களில் தீபாவளியின் ஐந்தாம் நாள் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்.

பாய்  என்றால் இந்தி மொழியில்  சகோதரன் என்று பொருள்.தூஜ் என்பது அமாவாசைக்குப் பிந்தைய இரண்டாவது நாளைக் குறிக்கிறது.

இந்த நாள் சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பான உறவைக் கொண்டாடும் நாள் ஆகும். இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நீண்ட ஆயுள் மற்றும் மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குப் பரிசுகளை வழங்குகின்றனர்.

இது  குடும்ப உறவுகளைக்

கட்டிக் காக்கும் ஒரு பாரம்பரிய 

கலாச்சார விழா என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் பாய் தூஜ்  கொண்டாடுவதன் பின்னணியில் ஒரு புராண கதை இருப்பதாகக் கூறுகின்றனர்.


நரகாசுரன் என்று ஒரு அரக்கன்

இருந்தான்.

அவன் இந்திரலோகத்து மன்னன்

இந்திரனை வென்று சொர்க்கபுரியைக் கைப்பற்றி கொண்டான்.

அது மட்டுமல்லாமல் அங்கிருந்த பதினாராயிரம் பெண்களையும் சிறைப்பிடித்துச் சென்றுவிட்டான்.


அத்தோடு அவன் நின்றுவிடவில்லை.

தேவேந்திரன் தாயான அதிதி அணிந்திருந்த மந்திரக் கம்மலையும் எடுத்துச் சென்றுவிட்டான்.


அவனது ஆணவத்தை எப்படி அடக்குவது?


இப்போது தேவர்கள் அனைவரும்

தங்களை காக்கும்படி மகா விஷ்ணுவிடம்

சென்று மன்றாடுகின்றனர்.

இந்த நரகாசுரனின்  ஆணவத்தை அடக்கி எம்மையும்

மக்களையும் காக்க வேண்டும் என்று 

கேட்டுக் கொள்கின்றனர்.

தேவர்களையும் மக்களையும் காப்பதற்காக

விஷ்ணு  பகவான் நரகாசுரனை அழித்ததோடு மட்டுமல்லாமல்

பெண்களையும் தாய் அதிதியின்

மந்திரக் கம்மலையும் மீட்டு வருகிறார்.

நரகாசுரன் அழிந்த நாள் தீபாவளி.

நரகாசுரனை  கொன்று பெண்களை 

மீட்டு வந்த மகிழ்ச்சியில் விஷ்ணு பகவானான கிருஷ்ணர் இருக்கிறார்.

இப்போது அந்த நல்ல செய்தியைத்  தன்

தங்கை சுபத்திராவிடம் சொல்லி மகிழ

வேண்டும் என்று  நினைக்கிறார்.

சகோதரி வீட்டிற்குப் போகும்போது

வெறுங்கையோடு போக முடியுமா ...?

கையில் ஏதாவது கொண்டு செல்ல 

வேண்டுமல்லவா! 

அதனால்  கையில் தங்கையை 

மகிழ்ச்சிப்படுத்த பரிசுப் பொருட்களைக்

கொண்டு செல்கிறார்.

தன் சகோதரனைக் கண்ட 

சுபத்திராக்கு மிக்க மகிழ்ச்சி.

உடனே சகோதரனின் நெற்றியில் வெற்றித் திலகமிட்டு

வரவேற்று தனது மகிழ்ச்சியைப்

பகிர்ந்து கொள்கிறார்.

அந்த நாளைத்தான் வட இந்தியர்கள்

பாய்தூஜ் என்ற விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

.இன்றும் சகோதரர்கள் குடும்பம் குடும்பமாக தன் சகோதரிகள் வீட்டிற்கு கையில்  தம்மால் இயன்ற பரிசுப் பொருட்களைக்

 கொண்டு செல்வதை நம்மால் 

 காண முடியும்.

 நரகாசுரனைக் கொன்ற வெற்றியைக்

கொண்டாடும் நாளாக இருந்தாலும்

தன் உறவுகளோடு தீபாவளி பண்டிகையை 

கொண்டாடி முடிக்கும் பாய் தூஜ்  கொண்டாட்டம் தீபாவளி பண்டிகையின் சிறப்பான ஒரு நாளாகக் கருதப்படுகிறது.

உடன் பிறந்த சகோதரிகளோடு 

மகிழ்ந்து கொண்டாடும்

பாய்தூஜ் கொண்டாட்டத்தை வட இந்தியர்கள்

மட்டுமல்ல தற்போது அனைவரும் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

கணவனின் ஆயுளுக்காக தீபம் 

ஏற்றிக் தொடங்கிய முதல்நாள் தீபாவளி

சகோதரனின் நல்வாழ்வுக்காக

பிராத்தனை செய்து கூடி மகிழும் நாளாக ஐந்தாம்நாளில் முத்தாய்ப்பாக முடிவு பெறுவது  தீபாவளி கொண்டாட்டங்களின் தனிச்சிறப்பு.

மகாராஷ்டிராவில் இது பாவ் பீஜ் என்று அழைக்கப்படுகிறது.

பெயர் அவரவர் மொழிக்கு ஏற்ப மாறுபட்டு இருந்தாலும் இந்தப் பண்டிகை கொண்டாடுவதற்காக நோக்கம் அனைவர்க்கும் பொதுவாகவே உள்ளது.

அவரவர் சகோதர சகோதரிகளோடு

பாவ்தூஜ்  கொண்டாடி மகிழுங்கள்.

குடும்ப உறவுகளை கட்டிக்காக்க வேண்டியதின் அவசியத்தை இளைய தலைமுறையினருக்கு ஒரு விழுமியமாகக் கற்றுத்தர மறவாதிருங்கள்.

அனைவர்க்கும் பாய்தூஜ் நல்வாழ்த்துக்கள்.

கருத்துகள்

Popular Posts