பிறந்தநாள் வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்து
நட்பெனும் நன்னிலத்தில்
நட்டு வைத்த
கலைமகளே!
புன்னகைக்கு புதிய
அத்தியாயம் கற்பித்த
ஆவாரம்பூவே!
அசலான அன்புக்கு
அழகு தமிழில்
அகராதி எழுதியவளே!
என் அகவை நாள்
வாழ்த்துப்பா நின்செவியில்
ஆனந்த இசை மீட்டிடட்டும்
இனிமையும் புதுமையும்
இல்லத்தில் இணைந்தே
நடை பயிலட்டும் !
எண்ணியவை நண்ணியவை
எளிதாய் இல்லத்தில்
வாசம் செய்திடட்டும்
வாழ்க்கை வசந்த கால
பூங்காடாக பூத்து
மணம் சேர்க்கட்டும்!
உன்னிலே என்னையும்
என்னிலே உன்னையும்
பிணைத்துவிட்ட நட்பினை
நம்மிலே வைத்து
காலம் கரம் கோத்து
களிப்புடன் வழி நடத்தட்டும் !
நலமும் வளமும்
நாளும் இல்லத்தில்
நல்லாட்சி நடத்திடட்டும் !
வாழ்க பல்லாண்டு
பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
இன்றுபோல என்றென்றும் மகிழ்ந்து!
கருத்துகள்
கருத்துரையிடுக