வாழ்த்துப்பா


தமிழாசிரியர் குழுமம்,

      மும்பை.கூடல் மாநகரில் கூடிய முதலணி


கூடி  செய்து வந்தது  தமிழ்ப்பணி


மராட்டியத்தில் மலர்ந்த தமிழாசிரியர் கூட்டணி - மும்பையில்


ஆற்றி வருவது நல்லதோர்  அறப்பணி ஆசிரியப் பணி என்பது  அறப்பணி


அறப்பணி தான் குழுமத்தின் முதற்பணி


பொதுப்பணி ஆற்றுதல்  என்றும் நற்பணி - அதனை

\

 அர்ப்பணிப்புடன் ஆற்றுதல்தான்  குழுமத் தனிப்பாணி ஆசிரியர் யாவரும் கூட்டணியின் பின்னணி


ஆசிரியர் குழுமத்தின் பெயர் என்றும் முன்னணி


ஆசிரியரொடு திரளும்  என்றுமொரு பேரணி - அது


மும்பைத் தமிழுக்கு வாய்த்த  நற்பெயரணி

\


வாணிக்குச் சேவை செய்யும் தோணி


நீவீரெனல் உயர்வு நவிற்சி அணி


பாரணித் தமிழை இழுக்கும் அழகுத் தேரணி -என்று


சொல்வது  வேற்றுப் பொருள் வைப்பணிதமிழுக்காய் உழைக்கும் உயிர்மெய் என்றழைப்பது


இங்கே என் தற்குறிப்பேற்ற அணி


வானன்ன சேவை எனவாழ்த்தி மகிழ்வது -உமக்கு


 நான்  சொல்லி மகிழும் உவமையணிஓரணியாய் இருப்பதால் கிடைத்ததிந்த உயர்வணி


வேரணி  வேற்றுமையில்லா அணியென்ற சிறப்பணி


பூரணியாய் உவந்து நிற்கும் குமுக வெற்றிக் கூட்டணிக்குத்


 தாரணியாய் இப்பாவணியைச் சூட்டி மகிழ்கிறேன்!                                 - செல்வபாய் ஜெயராஜ் 

Comments

Popular Posts