பா வகைகள். ( யாப்பிலக்கணம் )

                        பா வகைகள்

செய்யுள்கள் அல்லது பாக்கள்  அவற்றின் சீர்களுக்கு இடையே உள்ள தளைகளின் தன்மையின் அடிப்படையில்   வெவ்வேறுவிதமான ஓசைகளை உடையனவாக
         
           இருக்கின்றன.இவ்வோசைகளின் வேறுபாட்டின்
          
            அடிப்படையிலேயே பாவகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு நிற்கின்றன.
        ஓசைகள் நான்கு வகைப்படுகின்றன.அவை செப்பலோசை ,
       
         அகவலோசை  ,  துள்ளலோசை  , தூங்கலோசை என்பனவாம்.

       மரபுக்கவிதைகளை பா வகைகள், பாவினங்கள் என்று வகைப்படுத்துவர்.
       பாவகைகள் ஐவகைப்படும். அவை :
      
       செப்பலோசையை உடைய வெண்பா
      
       அகவலோசையை உடைய ஆசிரியப்பா
      
       துள்ளலோசையை உடைய கலிப்பா
      
       தூங்கலோசையை உடைய வஞ்சிப்பா
      
       வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா
       என்பனவாம்.

       வெண்பாவிற்கான ஓசை செப்பலோசையாகும்.
      
       செப்பல் என்றால்  செப்புதல், உரைத்தல் ,விடை கூறுதல் எனப்படும்.
       வினாவிற்கு விடை கொடுப்பது போன்ற ஓசை இருப்பதால்
      
       செப்பலோசை எனப்படுகிறது.

                  ஆசிரியப்பாவிற்கான ஓசை அகவல் ஓசை.
                 
                  அகவல் என்பது அழைத்தல் என்னும் பொருள் உடையது.
                 
                  ஒவ்வோர் அடியும் தனித்தனியே அழைக்கும் வகையில்
                 
                  அமைந்திருப்பதுதான் அகவல் என்பதற்கான காரணம்.

         மூன்றாவதாக வருவது கலிப்பாவிற்கான துள்ளல் ஓசை.
        
         அலைகள் தள்ளுவது போல சொற்கள் அமைந்திருப்பதால்
        
          துள்ளல் ஓசை வந்திருப்பதாக கூறுவர்.
         
         நான்காவதாக வருவது  வஞ்சிப்பாவிற்கான தூங்கலோசை.
        
         தூங்கல் என்றால் தொங்கல் என்ற பொருள்.
        
         நெடுஞ்சீர்களால் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்
         என்பர்.
         மருட்பா என்பது வெண்பாவிற்கும் ஆசிரியப்பாவிற்கும் உரிய ஓசை.
         மருள் என்றால் கலத்தல் என்று பொருள்.
        
         வெண்பாவின் செப்பலோசையும் ஆசிரியப்பாவின் அகவற்பாவும் கலந்து வருவதால் மருட்பா எனப்படுகிறது.
        
         ஓசைகளில் ஒவ்வொன்றும் மூன்று மூன்று வகையாக பிரிந்து
         வரும்.
        
        
                   

Comments

 1. Nice and very simple explanation tr

  ReplyDelete
 2. நன்றி சித்ரா. வல்லினம் மிகும் இடங்கள்,
  மிகா இடங்கள் கட்டுரை வேண்டும் என்றால்
  அனுப்புகிறேன்.
  அல்லது கூகுளில் தேடி
  என் இலக்கண கட்டுரைகளை எடுத்து
  மாணவர்களுக்குத்
  கொடுங்கள். பயன்
  உள்ளதாக
  இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அம்மா புரியும்படி விளக்கமாக இருந்தது நன்றி அம்மா

   Delete
 3. எழுசீர்விருத்தம்
  அந்தமும் ஆதி யும்இல்லா வடிவாம்
  விளம் மா விளம் மா
  இது சரியா

  ReplyDelete

Post a Comment