உள்ளத்தோடு உறவாடு

உள்ளத்தோடு உறவாடு


1."பேசும் வார்த்தைகள் வெற்றி

     தோல்விக்கான விதைகள் "


2. "உண்மையாய் இருக்கலாம்.

    ஊமையாய் இருக்கக் கூடாது."


3. "தீதும் நன்றும் பிறர் தர வாரா "


4.  "உண்மை இருக்கும் இடத்தில் 

    ஊன்றுகோல் தேவையில்லை."


5." பாதைகள் பயணத்தைத்

     தீர்மானிப்பதில்லை.

     

6. "காலம் சிறந்த ஆசான்"


7. "உங்களுக்கு ஆலோசனை வழங்க

   உங்களைவிட சரியான மனிதர்

  வேறு யாரும் இருக்க முடியாது."


8. "பணம் ஒரு பிரிவினைவாதி"


9.  "நேர்மைக்கு முன்னால்

     துரோகம் தோற்றுப் போகும்."


10. "தன்னை மட்டுமே நம்புகிறவன்

      யாரிடமும் தோற்பதில்லை.


11.   "மனதின் மொழி அன்பு


12.  "பணம் உதடுகளைத் திறக்க

       வைக்கும்."


13.  "மௌனம் பேசும்"


14. "அவரவர் மனமே 

      அவரவர்க்குச் சாட்சி"


15. "உறவுகளை உயிரென்று

      நினையாத வரை

       மகிழ்ச்சி நிலைக்கும் "

       

16. "நேர்மையைத் தோற்கடிக்கும்

      துரோகம் நீடிப்பதில்லை."


17. "நிஜங்கள் நிலைப்பதில்லை

      நினைவுகள் அழிவதில்லை."


18. "யானை கீழே விழுந்தால்

      பூனைகூட ஏறி நடக்கும் "

      

19. "உதடுகளின் மொழி பணம்"


20 நடத்தையை விட நன்மதிப்பைத்

      தருவது பணம் .


21. சின்னச்சின்ன விசயங்களில்

      மகிழ்ச்சி இருக்கும்.

      ஆனால் மகிழ்ச்சி சின்ன

      விசயம் அல்ல.

      

22. பாதை காட்ட யாரும் வருவதில்லை

      உன் பாதம் பட்ட இடம்

      உனக்கான பாதை.

      உனக்கான பாதையை நீதான்

      உருவாக்க வேண்டும்.

      உனக்குப் பாதை.


23. விரும்பியவை தேடும்

       விடியலாகட்டும் இன்று.

       

24. எந்தப் பொருளையும்

     கொடுப்பதற்கு மனம் வேண்டும்.

      மறுப்பதற்குக் காரணம் வேண்டும்.


25. கையில் இருக்கும்வரை

      ஒரு பொருளின் அருமை தெரியாது.

      கைவிட்டுப் போன பின்னர்

      அதே மாதிரி மதிப்புமிக்க

      பொருள் வேறு எதுவுமில்லை என்று

      புலம்புவோம்.


26. நாய் என்றால் குரைக்கத்தான் 

      செய்யும். வாய் என்றால் குறை 

      சொல்லத்தான் செய்யும்.


27.பறக்க நினைக்கிறவன் விழுவதைப்பற்றி யோசிக்கக் கூடாது.

விழுந்தால் எப்படி எழும்புவது

என்பதை பற்றி மட்டுமே

யோசிக்க வேண்டும்.




27.

Comments

Popular Posts