இறைவனை எப்போது தொழ வேண்டும்
இறைவனை தொழுவதற்கு உகந்த
நேரம் எது? "என்று பாலன் தன்
தன் நண்பன் மதிவண்ணனிடம் கேட்டான்.
"அதிகாலை நேரம் அதுதான் இறைவனைத்
தொழுவதற்கு உகந்த நேரம் "என்று
பதிலளித்தான் நண்பன்.
"அமைதியான அந்தக் காலைப் பொழுதுதான்
மனதை ஒருமுகப்படுத்தி பிராத்தனையில் ஈடுபட
முடியும் .வெளியுலக குறுக்கீடு எதுவும்
இல்லாத அமைதியானச் சூழல்
பிராத்தனைக்கு ஏற்ற நேரம்தான்.
ஆனால் என்னால் அது முடிவதில்லையே"
என்றார் பாலன்.
"நீ சொல்லுவதும் சரிதான்.
வேலை வேலை என்று எப்போதும்
கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு
ஓடுவதால் கடவுளைத் தொழ நேரம்
கிடைப்பதே அரிதாக இருக்கிறது"
புலம்பினான் மதி வண்ணன்.
" இப்படி ஆளுக்கொரு சாக்கு போக்குச் சொல்லிக்
கொண்டிருந்தால் இறைவனைத் தொழுவதற்கு
கால நேரமே கிடையாதா ?
ஒரு மனிதன் எப்போதுதான்
இறைவனை வணங்குவது? "
ஒரே குழப்பமாக இருக்கிறது.
கையைப் பிசைந்தபடி ஏதோ
சிந்தனையில் அமர்ந்தான் பாலன்.
"இன்று இதற்கு ஒரு தீர்வு கண்டே
ஆக வேண்டும்."
" யாரிடம் போனால் இதற்குத் தீர்வு
கிடைக்கும் ?"
இப்படி எனக்குள் கேள்விகள் எழ ஆரம்பித்தன.
"வாருங்கள். காளமேகத்திடம் போவோம்.
அவர்தான் இதற்குச் சரியான பதில்
சொல்லுவார்"
நேரே இருவரையும்
அழைத்துக்கொண்டு காளமேகத்திடம்
வந்தேன்.
" ஐயா, எங்களுக்கு
ஓர் ஐயம்.
தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும் என்றேன்.
என் கவியிலா ....இல்லை
கவியிலுள்ள பொருளிலா?
தங்கள் கவியில் பிழை காண
என்னால் கூடுமோ....?
வேறு ஒரு பொருளில்...
ம்... கூறுங்கள். என்னால் முடியுமானால்
உங்கள் ஐயத்தைத் தீர்த்து வைக்கிறேன்.
".இறைவனைத்
தொழுவதற்கு உகந்த காலம் எது?"
" காலம் எது என்பது இருக்கட்டும்.
முதலாவது உங்களுக்குக் கணக்குத் தெரியுமா?"
திருப்பிக் என்று கேட்டார் காளமேகம்.
"கணக்கா....கணக்குக்கும்
கடவுளைத் தொழுவதற்கும்
என்ன தொடர்பு இருக்கிறது
ஏன் இந்தக் கணக்கு"
"நான் சொல்லும் கணக்குத் தெரிந்தால்தான்
இறைவனைத் தேடும் காலம் எது
என்பதை உங்களால் அறிந்து கொள்ளமுடியும்."
"சொல்லுங்கள். தெரிகிறதா...
அறிய முடிகிறதா இல்லையா
என்று பார்ப்போம்."
"முக்காலுக்கு ஏகாமுன்
முன்நரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டு
அஞ்சாமுன் -விக்கி
இருமாமுன் மாகாணிக்கு
ஏகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை இன்று ஓது"
பாடி முடித்த காளமேகம்
பொதுவாக என் முகத்தைப் பார்த்து
புன்னகைத்தார்.
"இது என்ன முக்கால் அரைக்கால்
நரைக்கால் என்று ஒரே குழப்பமாக
இருக்கிறதே!"
என்று ஒன்றும் புரியவில்லை
என்று கையை அசைத்தேன்.
முக்காலுக்கு ஏகாமுன் - என்றால்...
முதுமை காரணமாக மூன்று காலால் நடப்பதற்கு முன்
அதாவது கால்கள் வலுவிழந்து கோல்
ஊன்றி நடப்பதற்கு முன்னர் இறைவனைத்
தேட வேண்டும்."என்றார்.
"முன் நரையில் வீழாமுன் - என்றால்..."
"முன் நெற்றியில் நரைமுடி தெரிவதற்கு
முன்பாக இறைவனைத் தேட வேண்டும்."
"அடேங்கப்பா....அருமையான விளக்கம்.
அடுத்து
அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன்-என்று சொன்னீர்களே
அதன் பொருள் என்ன,?..
"காலன் வருவதைக் கண்டு அஞ்சி நடுங்கும்
வயோதிகம் வரும்முன் இறைவனைத்
தேட வேண்டும்."
முதுமை வரும் முன்னர் இறைவனைத்
தேட வேண்டும்.
அதன் பின்னரும்
விக்கி இருமாமுன் - என்று சொன்னீர்களே
அது என்னவாம்?
"விக்கல் வந்து இருமி
துன்பப்படுவதற்குமுன்
அதாவது நோய்வாய்ப்பட்டு
படுக்கையில் வாழ்வதற்கு முன்னர்
இறைவனைத் தேட வேண்டும்."
"மாகாணிக்கு ஏகாமுன் - என்றால்..."
மயானத்திற்குச் செல்லும் நாள்
வருவதற்கு முன் இறைவனைத் தேட
வேண்டும்.
நல்ல கணக்கு. நவின்றதில்
அறிந்தேன் இறைவனைத் தொழும்
கணக்கு.
கச்சி ஒருமாவின் - என்றால்...
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு மாமரத்தின்
கீழரை - என்றால்...
கீழே அமர்ந்திருப்பவரை
இன்று ஓது - என்றால்...
இன்றே வணங்கு
என்பது இப்பாடலின் பொருளாகும்.
"அதாவது மூன்றாம் காலாக
கம்பு ஊன்றி நடக்கும் காலம் வருமுன்,
தலைமுடி நரைத்து முதுமை வரும்முன்,
ஐயோ காலன் வந்து அழைத்துச்
சென்றுவிடுவானோ என்று அஞ்சி
நடுங்கும் காலம் வருமுன்,
விக்கல் வந்து இழுத்துப் படுக்கையில்
கிடத்தும் காலம்
வருமுன்,மயானம் செல்லும் காலத்திற்கு
முன் இறைவனைத் தேடு.
இறைவனைத் தேடுவதற்கு கால நேரம்
பார்க்காதே. முதுமை வந்தபின் இறைவனைத்
தேடலாம் என்று இருந்துவிடாதே.
கால், கை எல்லாம் நன்றாக இருக்கும்போதே
இறைவனைத் தேடுவாயாக என்கிறீர்கள்
இல்லையா?"
"சரியாக புரிந்து கொண்டீர்கள்"
நான் காலையில் இறைவனைத் தேடு
என்று சொல்வார் என்று நினைத்தேன்
என்றான் பாலன்.
"ஆமாங்க...இறைவனைத் தேட
கால நேரம் பார்க்கக்கூடாதுதான். ஆனால்
இதில் என்ன கணக்கு இருக்கிறது?
இதையும் கொஞ்சம் விளக்கி விடுங்களேன்"
என்றேன்.
கணக்கறியாப் பிள்ளைகள்
என்று செல்லமாகக் கடிந்து கொண்டபடி
விளக்க ஆரம்பித்தார்.
"முக்கால் = 3/4
அரை = 1/ 2
கால் = 1/4
அரைக்கால் = 1/8
இருமா = 1/ 10
மாகாணி = 1 /16 ( வீசம்)
ஒருமா = 1/ 20
கீழரை = 1/640
என்று எட்டு பின்ன எண்கள் பின்னப்பட்டிருப்பது
தெரியவில்லையா?" என்றார்.
பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிவிடலாமா என்றான் மறுபடியும் பாலன்.
"இதுதான் எண்ணலங்காரமா?
அதுவும் பின்னங்களை நிரல்பட
இறங்கு வரிசையில் அமைத்து
கவி படைத்த தங்கள் புலமையை என்னவென்பது?
பாராட்டிவிட்டு அவர்களோடு கடந்து
வந்தேன்.
நான் மட்டும் பாராட்டினால் போதுமா?
நீங்கள் பாராட்டாமல் இருத்தால் எப்படி?
ஒரே சொல்லுக்கு இரு பொருள் வரும்படி
பாடுவதை இரட்டுற மொழிதல் அல்லது
சிலேடை என்று கூறுவோம்.
இந்தச் சிலேடையில் நேரடியாகவே இருபொருள்
தரும் சொல்லான இருமா என்பதை
எழுதி செம்மொழிச் சிலேடையைப் புகுத்தியிருப்பார்
காளமேகம் .
தனித்து நிற்கும் போது ஒரு
பொருளும் பிரித்துப் படிக்கும் போது
இன்னொரு பொருளும் தரும் பிரிமொழிச்
சிலேடையை அக்கால் அரைக்கால்
கண்டு அஞ்சாமல் என்றசொற்றொடரில்
அமைத்து கவியை அழகுபடுத்தியப்
பாங்கினைப் பாராட்டாமல் இருக்க முடியுமா
என்ன?
இறைவனைத் தொழுவதற்கு உகந்த காலம்
எது என கேட்க...
காலத்தோடு கணிதத்தையும் கவின்மிகு
இலக்கண நெறியோடு சொல்லித் தரும்
பாங்கு கவி காளமேகத்தைத் தவிர வேறு
யாருக்கு வரும் ?
தொ
Comments
Post a Comment