வினையாலணையும் பெயர்
வினையாலணையும் பெயர்
ஒரு வினைமுற்று வினையை உணர்த்தாது
அவ்வினைக்கு உரிய கருத்தாவை உணர்த்தி,
எழுவாயாக நின்று, வேற்றுமை உருபை
ஏற்றும் ஏற்காமலும் வருவது
வினையாலணையும் பெயர் எனப்படும்.
படித்ததும் ஒன்றும் விளங்காதது
போல இருக்கும்.
மனப்பாடமாகப் படித்துவிட்டோம்.
இப்போது வினைமுற்று என்றால்
என்ன?என்ற கேள்வி எழுகிறது.
அதனை முதலாவது பார்ப்போம்.
ஒரு வினைச்சொல்லானது ஒரு செயல்
முடிவுற்ற நிலையில் வினைமுற்று
என்று அழைக்கப்படும்.
மாதவன் பாடினான் .
மலர் ஆடினாள்.
தலைவர் கொடுத்தார்.
கொடி அசைந்தது
பறவைகள் பறந்தன.
பாடினார், ஆடினாள் , கொடுத்தார்,
அசைந்தது , பறந்தன
இவை யாவும் ஒரு முடிவுற்ற செயலை
அதாவது வினையைக் குறிப்பிடுவதால்
இவற்றை வினைமுற்று என்று அழைக்கிறோம்.
முடிவுற்ற வினை வினைமுற்று
எனப்படும் என்பதை அப்படியே
மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது வினைமுற்று என்றால்
என்ன என்பது புரிந்திருக்கும்.
வினையாலணையும் பெயர்
ஒருவினைமுற்று வினையை உணர்த்தாமல்
அந்த வினையைப் செய்தவரை உணர்த்தும்
அதாவது கருத்தாவை உணர்த்தும்.
பாடியவன் பாராட்டு பெற்றான்.
இதில் பாடியவன் வினையாலணையும் பெயர்.
பாராட்டு பெற்றது யார்?
பாடுதலாகிய செயலைச் செய்தவன்.
அதனால் பாடியவன் வினையாலணையும்
பெயர் ஆயிற்று.
மாணவனுக்கு பரிசு கிடைத்தது.
இதில் மாணவனுக்கு வினையாலணையும் பெயர்.
மாணவன் + கு = மாணவனுக்கு
கு என்ற நான்காம் வேற்றுமை
உருபை ஏற்று வந்துள்ளது.
ஆடியவன் பரிசு பெற்றான்.
ஆடியவன் பெயர்த்தன்மை
பெற்று வந்துள்ள வினையாலணையும்
பெயர்.
பாடியவனுக்குப் பரிசு கிடைத்தது.
பாடியவன் என்ற வினைமுற்றுசொல்
நான்காம் வேற்றுமை உருபான
'கு' சேர்ந்து பாடியவனுக்கு என்று வந்துள்ளது.
அதனால் பாடியவனுக்கு என்பது
வேற்றுமை உருபை ஏற்று வந்த
வினையாலணையும்
பெயர் ஆகும்.
எதிர்மறை வினையாலணையும் பெயர் :
வினையாலணையும் பெயர்
எதிர்மறைப் பொருளிலும்
வருவதுண்டு.
படிக்காதவர் மதிப்பெண் பெறமுடியாது.
உழைக்காதவர் ஊதியம் பெறமுடியாது.
படிக்காதவர்
உழைக்காதவர்
எதிர்மறை வினையாலணையும்
பெயர்களாகும்.
வினையாலணையும் பெயர்
மூன்று வகைப்படும்.
1 . தன்மை வினையாலணையும் பெயர்
2. முன்னிலை வினையால் டையும் பெயர்
3. படர்க்கை வினையாலணையும் பெயர்.
1. தன்மை வினையாலணையும் பெயர்:
தன்மை வினைமுற்று பெயர்த்தன்மை
பெற்று வந்தால் அது தன்மை
வினையாலணையும்
பெயர் எனப்படும்.
எடுத்துக்காட்டு :
பாடினேனைப் பாராட்டினர்.
(பாடிய என்னைப் பாராட்டினர்)
விழுந்தேனைப் பார்த்தாயா?
( விழுந்த என்னைப் பார்த்தாயா?)
2.முன்னிலை வினையாலணையும் பெயர் :
முன்னிலை வினைமுற்று பெயர்த்தன்மை
பெற்று வந்தால் முன்னிலை
வினையாலணையும் பெயர் எனப்படும்.
வென்றாயைக் கண்டேன்.
( வென்ற உன்னைக் கண்டேன்.)
வென்றீரைக் கண்டேன்.
( வென்ற உங்களைக் கண்டேன் )
3. படர்க்கை வினையாலணையும் பெயர்:
படர்க்கை வினைமுற்று பெயர்த்தன்மை
பெற்று வந்தால் படர்க்கை
வினையாலணையும் பெயர் எனப்படும்.
ஆடியவனுக்கு வெற்றி கிடைத்தது.
படித்தவனுக்குப் பரிசு கிடைத்தது.
மேலும் சில வினையாலணையும் பெயர்கள்
உள்ள சொற்றொடர்கள் இதோ:
பாடியவள் வந்தாள்.
பாடியவள் - வினையாலணையும் பெயர்
வந்தாள் - வினைமுற்று
இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினைப்
புரிந்து கொள்ளுங்கள்.
பாடியவர் என்பது பாடிய
செயலைக் குறிக்கவில்லை.
பாடிய செயலைச் செய்தவளைக்
குறிப்பிடுவதால்
பாடியவள் வினையாலணையும் பெயர்.
எல்லாச் சொற்றொடர்களையும்
இப்படி பிரித்துப் பொருள் அறிந்து
வினையாலணையும் பெயர்
எது என்பதைக் கண்டறியுங்கள்.
எளிமையாக இருக்கும்.
நாடியவன் பெற்றான்.
வந்தவர்கள் நின்றனர்.
பேசியவர் வந்தார்.
உண்டவர் உறங்கினார்.
வந்தானைப் பார்த்தேன்.
( வந்தவனைப் பார்த்தேன்.)
கரியானைக் கண்டேன்.
( கரியவனைக் கண்டேன்.)
Comments
Post a Comment