பிளாக் காமடி என்றால் என்ன?

பிளாக் காமடி என்றால் என்ன?

நகைச்சுவையை விரும்பாதவர் 
எவரும் இருக்க
முடியாது.
எப்படிப்பட்ட முரட்டு சுபாவம்
உள்ளவராக இருப்பினும் நகைச்சுவையான
பேச்சினைக் கேட்டதும் 
அப்படியே தன்னை மறந்து சிரித்துவிடுவார்.
தன் கவலைகளை மறக்க வைக்கும்
ஆற்றல் நகைச்சுவைக்கு உண்டு.

நகைச்சுவை மட்டும் இல்லை என்றால்
நம் மனது எப்போதோ வறண்டு
போயிருக்கும். இருட்டு போயிருக்கும் .
இதனை காந்தியடிகள் கூட
தன் சத்திய சோதனை என்ற
புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார்.


பாலைவனப் பசுஞ்சோலை போல் 
அங்கங்கே சில நகைச்சுவைகள்
வந்து நம் மன இறுக்கத்தை
தளர்வு செய்து சற்று 
அமைதிபடுத்திச் செல்வதால்தான்
ஓரளவிற்கு இயல்பாக வாழ முடிகிறது.

திரைப்படங்கள் '
 வார மாத இதழ்கள் , பத்திரிகை
 என்று எல்லா இடங்களிலும் நகைச்சுவை
 நிரம்பிக் கிடக்கின்றன.
 அவற்றைத்
 தூக்கி வந்து நம் கைகளில்
 கொடுத்து 
 சிரிக்க வைக்கும் பணியை அவை
 ஓரளவுக்குச் செய்து வருகின்றன.

 சிலரிடம் இயல்பாகவே
நகைச்சுவை உணர்வு மிகுந்திருக்கும்.
எதையும் நகைச்சுவையாகப் பேசி
கடந்துபோய்விடுவார்கள்.
தான் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக
வைத்துக்கொள்ள முயற்சி செய்வார்கள்.

அவர்களோடு இருக்கும்போது நமக்கும்
அந்த உணர்வு தொற்றிக்கொள்ளும்.
அந்த இடமே மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால் எல்லா நகைச்சுவையும்
ஒரே மாதிரியான உணர்வினைக் 
கொடுத்துச் செல்வதில்லை.
எல்லா நகைச்சுவையாளர்களும்
மகிழ்ச்சி தரும் நகைச்சுவைகளை மட்டும்
பகிர்ந்து கொள்வதில்லை.

சில நகைச்சுவைகளைப் படிக்கும் போது
உண்மையிலேயே எழுதியவர் மீது
நமக்கு ஒரு வெறுப்பு ஏற்படும்.

நகைச்சுவை  
மன உளைச்சலுக்கு நல்ல மருந்துதான்.
மறுப்பதற்கில்லை.
எனினும் சிலர் நகைச் சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்தம் தரும் 
சொற்களைப் பயன்படுத்தி
நம்மை முகம் சுளிக்க வைப்பர்.

இலக்கியங்களிலும் நகைச்சுவை
உண்டு.
பாரதிதாசனின் இருண்ட வீட்டில் நகைச்சுவை மிகுந்திருக்கும்
அரிஸ்டாட்டில் கவிதைகள் 
நகைச்சுவை உணர்வைத் தாங்கி
நிற்கும். 

நகைச்சுவை என்பது
ஆரம்ப காலத்தில் சமூக அக்கறை 
தாங்கியதாக இருந்தது.
காலப்போக்கில் எள்ளலும் நையாண்டியும்
பரியாசமும் நகைச்சுவையாகச்
சொல்லப்பட்டபோது அதனை 
பெரிதும் கொண்டாட முடியவில்லை.
 
 மக்களின் மன அழுத்தத்தைக் குறைக்க 
 வேண்டும் என்ற நோக்கிலேயே நாடகங்கள் 
 திரைப்படங்கள் போன்ற பொழுதுபோக்கு 
 நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகள் 
 சேர்க்கப்பட்டன.

நகைச்சுவை எந்த இடங்களில் எல்லாம் இருக்கும் என்ற ஒரு கேள்வியை
முன் வைத்தபோது

"எங்கே உயிர் இருக்கிறதோ அங்கெல்லாம்
முரண்பாடு உண்டு.
எங்கெல்லாம் முரண்பாடு
இருக்கிறதோ அங்கெல்லாம் 
நகைச்சுவை இருக்கிறது "என்று
பதிலளித்தார் ஒரு மேலை நாட்டு அறிஞர் .

முரண்பாட்டில் மூழ்கிக்கிடக்கும்
உலகில் நகைச்சுவைக்குப்
பஞ்சம் இருக்காது.
முரண்பாடுகளிலிருந்து வெளியில் வர
நகைச்சுவை தேவைப்படுகிறது.


சிலர் பேசும் நகைச்சுவை 
அதிர்ச்சியூட்டக் கூடியது.
வேதனை தருவது .
மூர்க்கத்தனமானது
இப்படிப்பட்ட நகைச்சுவைகளைச்
 சிலர் பேசும் போது
அதனை வெறுமனே வேடிக்கையாகச்
சொல்லிவிட்டார் என்று கடந்து 
போய்விட முடியாது.

சமீபத்தில் நாட்டில் நடக்கும்
நிகழ்வினைக் குறித்து 
ஒருவர் கூறியது 
காமடிபோல் தோன்றியது. ஆனால் அது காமடி அல்ல.
அந்தக் காமடி நம்மை சிரிக்க வைப்பதற்குப் பதிலாக 
வேதனையைத்தான் கொடுத்தது.

சொல்லப்படும் காமடி நம்மை ஏதோ ஒருவிதத்தில்
பாதித்திருந்தால் அதனை பிளாக் காமடி
என்று சொல்வார்கள். அதாவது வேடிக்கையான வேதனை
என்று சொல்வார்கள்.

அரசியல்வாதிகள் சில இடங்களில் பேசும்
பேச்சுக்களை நகைச்சுவையாக
எடுத்துக்கொண்டு கடந்து போய்விட முடியாது.

திரைப்படங்களிலும் போரினால்
ஏற்பட்ட அவலங்களை
படமெடுத்திருப்பார்கள் ஆனால்
அதனை நகைச்சுவையாக
தெரியப்படுத்திருந்தாலும் அதனால் 
பெறப்படும் செய்தி வேதனையானது.

இந்தப் பிளாக் காமடி அண்மை
காலமாக பேசு பொருளாகி வருகிறது.
அரசியல்வாதிகள் உதடுகள் உச்சரிக்கும்
சொல்லாக உலா வருவது 
வேடிக்கையான வேதனை.


ஒருமுறை சாக்ரடீஸ் தன் நண்பரோடு
பேசிக் கொண்டிருந்தார்.
சாக்ரடீஸ் மனைவிக்குக் கோபம்
தலைக்கு ஏறியது.
அழைத்துப் பார்த்தார்.
அவர் வருவதாகத் தெரியவில்லை.
சமையலறைக்குச் சென்றார்.
பாத்திரங்களை அங்குமிங்கும்
வீசி சலசலக்க வைத்தார்.
அதற்கும் சாக்ரடீஸ் அசைந்து
கொடுப்பதாகத் தெரியவில்லை.
ஒரு வாளி நிறைய தண்ணீரை
எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றார்.
கடகடவென சாக்ரடீஸ் தலையில்
கொட்டினார்.
சாக்ரடீசின் நண்பர் அதிர்ந்து
போய் நின்றார்.
சாக்ரட்டீஸ் மனநிலை என்னவாக
இருந்திருக்கும்?

ஆனாலும் சாக்ரடீஸ்
எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
இதுவரை இடி இடித்தது.
இப்போது மழை பொழிந்திருக்கிறது என்று நகைச்சுவையாகச்
சொல்லி கடந்து போய்விட்டார்.

நண்பரால் சாக்ரட்டீஸ் சொன்ன
நகைச்சுவையைக் கேட்டு வாய்விட்டு
சிரித்திருக்க முடியுமா?
சாக்ரடீஸ் நிலைமையை நினைத்து
உள்ளுக்குள் அழுதிருப்பார்.
வேதனை அடைந்திருப்பார்.
 
இது வேடிக்கையான வேதனை இல்லையா?
இதைத்தான் பிளாக் காமடி 
என்று சொல்லியிருப்பார்களோ?









 

Comments

  1. பிளாக் காமெடி அருமை அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts