தண்ணீர் நிலநலத்தால்

தண்ணீர் நிலநலத்தால்....


ஒருவருடைய குணத்தை எப்படி அறிந்துகொள்வது?

பழகிப் பார்த்தால் தெரிந்துவிடும். ஆனால் அனைவரிடமும் பழகிப் பார்க்க முடியுமா?

முடியாதல்லவா?

ஒருவர் சார்ந்திருக்கும்  இடத்தைப் பொருத்து அவர்   குணநலன் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


சிலருடைய செய்கைகள் அவருடைய குணத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். அதுதான் அவருக்குப் பெருமையாகவும் அமையும்.

யார் யாருக்கு எது எது பெருமையாக அமையும் என்பதைக் கூறுகிறது ஒரு நல்வழிப் பாடல்.


பாடல் உங்களுக்காக 

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்

கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை

கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்

அற்புதமாம் என்றே அறி"

 நன்னெறி 

பாடல் 16


கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் தண்ணீரின் குணம் அது இருக்கும் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப அறியப்படும்.

நல்ல மனிதர்களின் குணம் அவர்கள் செய்யும் தர்ம காரியங்களால்  அறியப்படும்.

கண்ணின் பெருமை கருணை பொங்கும் விழிகள் மூலம் அறியப்படும் .ஒரு பெண்ணின் சிறந்த குணம்  அவளின் கற்பு நெறி மாறாப் பண்பினால் அறியப்படும்.


நீருக்குப் பெருமை நிலத்தால்

மனிதர்களுக்குப் பெருமை

நற்செய்கையால்

கண்ணிற்குப்  பெருமை  கருணையால்

பெண்ணிற்குப் பெருமை 

கற்பு நெறி தவறாப் பண்பினால் 

 அருமையான கருத்து.

ஔவை கருத்துக்கு மாற்றுக் கருத்து ஏது?




கருத்துகள்

Popular Posts