எத்தனை குருவிகள்

எத்தனை குருவிகள்?



ஓர் ஊரில், ஒரு விவசாயி ஒரு கலம் நெல்லை வயலிலே உலரவைத்தான். அந்த நெல்லை குருவிகள் கூட்டமாக வந்து அனைத்து நெல்லையும் தின்றுவிட்டன. அந்த விவசாயி ஒரு மண்ணாங்கட்டியை எடுத்து அக்குருவிகளின் கூட்டத்தின் மீது விட்டெறிந்தான். அந்த மண்ணாங்கட்டி பட்டு ஒரு குருவி இறந்து விட்டது. இறந்த குருவியின் வயிற்றைக் கூறிட்டுப் பார்த்தால் அதில் மூன்று நெல்கள் இருந்தன.  அப்படியானால்... எனது அனைத்து நெல்லையும் தின்ற குருவிகள் எத்தனையாக இருக்கும்?

என்று யோசித்தார் விவசாயி.


மன்னர் சோழ வளநாட்டில் வாரப்பெருக்கி உழவேண்டி

எண்ணியளந்து கலவிதையை யுலர விட்டு யான் போனேன்

கண்ணா லொன்றும் கண்டிலேன் கரிய குருவி ஒன்று போச்சுது

மண்ணாங் கட்டி கொண்டெறிந்தேன் மாண்ட குருவி தன் வயிற்றில்

எண்ணி மூன்று நெல்கண்டேன் எண்ணி இதனை உரையீரே

--சுவடி எண் 736


ஒரு கல நெல் என்பது 96 படி நெல்லாகும். ஒரு படிக்கு 14400 நெற்கள்.

 அப்படியானால்  விவசாயி உலரவைத்த

நெல் மணிகள் 14400.


 வைத்த மொத்த நெல்மணிகள்  எத்தனை?

ஒரு குருவி  கொத்திப் சென்றது மூன்று நெல் மணிகள்

அப்படியானால் 14400 நெல் பணிகளையும் கொத்திச் செல்ல  எத்தனை குருவிகள் வந்திருக்க வேண்டும்?

விடை தெரிந்தவர்கள் சொல்லி விட்டுச் செல்லுங்கள்.



கருத்துகள்

Popular Posts