கண்ணீர் அஞ்சலி
தமிழின் குரல் ஒன்று
இன்று மௌனமானது
அன்புப் பெரியோர்களே
அருமைத் தாய்மார்களே
தமிழின் குரல் ஒன்று
இன்று மௌனமாகியது
பட்டிமன்றத் தலைமை நீதிபதி
தீர்ப்பு எழுதுவதை நிறுத்திவிட்டார்
ஐயா
உங்கள் குரல் ஓய்ந்தாலும்
கொள்கை ஒருபோதும் ஓயாது
உடல் மறைந்தாலும்
உங்கள் புகழ் மறையாது
தமிழ் பேசும் நாவெல்லாம்
உங்கள் பெயரைச் சொல்லும்
தமிழை நேசிக்கும் நெஞ்சமெல்லாம்
உங்கள் நினைவைச் சுமக்கும்
தமிழ் இருக்கும் வரை
உங்கள் புகழ் இருக்கும்
பட்டிமன்றம் இருக்கும் இடமெல்லாம்
உங்கள் பெயர் ஒலிக்கும்
திருக்குறளின் எளிய உரையே
எம் இதயங்களின் நினைவலையே
நேற்றுவரை தமிழ் பேசிய உயிர்
இன்று காற்றோடு கரைந்ததேனோ ?
இதயம் கனக்கிறது
ஏற்க மனம் மறுக்கிறது
ஆற்றாமையால் மனம்
அலைமோதி உடைகிறது
ஆறாத் துயர் தந்து
மீளாத் துயில் கொண்ட
பட்டிமன்ற முடிசூடா மன்னர்
ஐயா பேராசிரியர்
சாலமன் பாப்பையா அவர்களுக்கு
கண்ணீரால்
கடைசி உரை எழுதுகிறேன்
கருத்துகள்
கருத்துரையிடுக