பணி நிறைவுப் பாராட்டு மடல்
பணி நிறைவுப் பாராட்டு மடல்
திருமதி சித்ரா பாலசுப்பிரமணியம்
ஆசிரியை,
கே.டி.காய்க்வாட் தமிழும் பள்ளி
சயான்-கோலிவாடா
மும்பை
சேலத்து மாங்கனிச் சுவையானவளைச்
சீர்மிகு நரசிம்மன் லட்சுமி இணை
வளைகரம் சுமந்தவளை மாதவளை
மன்னன் பாலசுப்பிரமணியம் மனையானவளை
ஆயிழை சித்ரா நற்பருவ மாமழை!
ஆரே காலனியில் பெய்த முதல்மழை
மாதுங்கா முலுண்ட் கோலிவாடா
மாணவர் வளை மாயம் கற்றவளை
பேரருள் பெருமதியானவளை
மாணிழை சித்ரா கற்பவர்க்கு மாமழை!
நினைவுவளை நிறைகுடமானவளை
புரிந்தவரைப் புடமிடச்செய்தவளை
உயர்ந்தவளை உள்ளம் கவர்ந்தவளை
உண்மைவளை நற்பண்பானவளை
தேன்குவளை சித்ரா பண்பு நிறைமழை!
தமிழானவளை தமிழாய்ந்தவளை
தக்கவரைத் தரமாக்கும்வளை
தளராதவளை தனித்துவமானவளை
தூதுவளை போலானவளை
சேயிழை சித்ரா தமிழுக்கு நல்மழை!
கனிந்தவளை கல்வி மொழிந்தவளை
அன்னவளை அன்பு தந்தவளை
புன்னகையிழை பொலிமுகமானவளை
என்னவளை என்நெஞ்சில் நிறைந்தவளை
பூவிழை சித்ரா எமக்குப் பூமழை!
ஓதும்பணி நிறைவானவளை
ஓர்ந்துநலம் சூழ்ந்தவளை
ஒத்திருகை தொழுதவளை
வாயார வாழ்த்துதும் யாம் இப்பொன்மகளை
நேரிழை சித்ரா என்றென்றும் மழை!
Comments
Post a Comment