உப்புக்கும் புளிக்கும் பாடலா...
உப்புக்கும் புளிக்கும் பாடலா?
கூழுக்குப் பாடியவரைத் தெரியும்.
உப்புக்கும் புளிக்கும் பாடியவரைத் தெரியுமா?
யார் அந்தப் புலவர்?
புலமை இருக்கும் இடத்தில் வறுமை இருக்கத்தான் செய்யும்
வயிற்றுக்காகத்தானே இந்தப் பாடு பாடலும்.
வயிற்றுப்பசி இல்லையேல் வாழ்க்கைச் சக்கரம் ஓட வேண்டும்.
அதற்காகத்தான் வள்ளல்களை நாடி ஓடி பாடி
பொருட்களைப் பெற்றனர் புலவர்கள்.
இந்தப் புலவருக்கு உப்புக்கும்
பாடுவாராம்.
கூடவே புளிக்கும் பாடுவேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
கூழாயிருந்தாலும் சற்று உப்பு இருந்தால்தானே குடிக்க முடியும்.
அதனால் அப்படி சொல்லி இருப்பாரோ?
சொல்லியவர் யார்
அறிந்து விடுவோம் வாருங்கள்.
அப்படி என்ன வறுமை?
புலவர்கள் அரசர்களைப் பாடி
பொருள் பெற்று வர பாடுவர்.
பாடுபவரிடம் வறுமை இருக்கும். பாட்டில் ஒருபோதும் வறுமை இருந்ததில்லை.
தன்மானம் இழந்ததில்லை.
நின்னை நினைத்தோ தமிழை ஓதினேன் என்று முகத்திற்கு நேரே கேட்கும் துணிவு உள்ளவர்கள் புலவர்கள்.
ஒருநாள் ஔவை தெருவில் வந்துகொண்டிருகிறார்.
சற்று அசதி.
எங்காவது சற்று அமர்ந்து இளைப்பாறி விட்டுச் செல்லலாம் என்று ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்கிறார்
வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கிறது.
என்ன என்று பார்க்கிறார்.
அழுகைக்கான காரணத்தைக் கேட்கிறார்.
தாயே நான் என் செய்வேன்?
என் கணவர் வந்து கேட்டால் என்ன பதில் சொல்வேன்? என்று சொல்லிவிட்டு மறுபடியும் அழுகிறாள்.
முதலாவது அழுகையை நிப்பாட்டு.
என்ன காரணம் என்று தெரிந்தால் தானே நான் உனக்கு உதவ முடியும் என்கிறார் ஔவை.
என் கணவர் ஆசை ஆசையாக பலாமரம்
வளர்த்தார். அதனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வெளியூர் சென்றார்.
ஆமாம்...இப்போது அந்த மரத்துக்கு
என்னவாயிற்று?
அந்த மரத்தை என் சக்களத்தி
வெட்டி விட்டாள்.
நான் என் கணவருக்கு என்ன பதில் சொல்வேன் விசும்பி விசும்பி
அழுதாள்.
இதுதான் உன் பிரச்சினை யா?
வா...உன் பலா மரம் நின்ற இடத்தைக் காட்டு
என்றார்.
அந்தப் பெண்ணும் ப
வீட்டின் பின்புறமாக பலா மரம் நின்ற இடத்திற்கு ஔவையை அழைத்துச்
சென்றார்.
ஔவை உருக்கமாகப் பாடல் பாடினார்.
பலா மரம் முன்பு போல் தழைத்து நின்றது.
ஆச்சரியப்பட்ட குறத்தி மகள்
அம்மா
.
தங்களுக்கு தந்துவிட என்னிடம் எதுவுமில்லை
இதோ நான்கு ஆழாக்கு தினை இருக்கிறது அதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று
திரையை ஒரு பொட்டலம் ஆகக் கட்டி ஔவை கையில் கொடுத்தார்.
ஔவை அங்கிருந்து விடைபெற்று
சோழ அரண்மனைக்குச் சென்றார்.
பெண்ணைப் பாடுகிறார்.
பாடிய புலழருவரூக்கு ஏதாவது வழங்க வேண்டுமே....ஒன்றுமே இல்லை.
அதற்காக வெறுங்கையோடு அனுப்பவா முடியும்?
வீட்டிற்குள் சென்று பானையைத் துழாவிக் பார்க்கிறாள். பானையின் அடியில் சிறிது தினை கிடக்கிறது.
நம்மால் முடிந்தது இதுதான்.
என்று தினையை ஒரு பொட்டலத்தில் கட்டி
அம்மையே! என்னால் உங்களுக்கு பெரிதாக எதுவும் தர முடியவில்லை.
சிறிது தினை இருக்கிறது. அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நீட்டுகிறாள்.
மகிழ்ச்சி. அன்போடு கொடுக்கும் கூழும் எனக்கு அமிர்தமே என்று சொல்லி வாங்கி விட்டு அங்கிருந்து விடைபெறுகிறார்.
சோழனைப் பார்க்க அரண்மனைக்குச்
செல்கிறார்.
அங்கே அரசவையில் மன்னன். கூடவே கம்பரும் இருக்கிறார்.
கம்பரும் ஔவைக்கும்
ஒருபோதும் ஒத்துப் போகாது.
ஔவையைப் பார்த்ததும் கம்பர் எடக்குமடக்காகப் பேசி மடக்க நினைத்தார்.
எப்போதுமே கூழுக்கும் பாடும் கூனக் கிழவி எனக் கிண்டலடிக்கும் கம்பருக்கு
இன்று ஔவை கையில் என்ன வைத்திருக்கிறார் அதை வைத்துக் கிண்டலடிக்க வேண்டும்
என்று ஆசை.
அந்த நேரத்தில் சோழ மன்னனும் ஔவையே தாங்கள்
கையில் வைத்திருக்கும் பொருள் என்னவோ என்று கேட்டுவிட்டார்.
ஔவை என்ன சொல்லப் போகிறார்
என்று ஒரு நாட்டுச் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் கம்பர்.
ஏற்கெனவே கூழுக்கும் பாடுபவள் என்று பேசுவார். பாடி தினை பெற்று வந்தேன்
என்றால்.....
கூழிலிருந்து தினைக்கு மாறிவிட்டீரோ என்று கேட்டாலும் கேட்பார்.
அவரை இதற்குமேல் பேச விடாது செய்ய வேண்டும் அதற்கு ஒரே வழி பாடலை சற்று மாற்றி விடுவோம் என்று நினைத்தார் .
ஒரு குறமகள் வீட்டு பலா தழைக்கப் பாடல் பாடினேன்.
பலாவும் தழைத்தது.
பாசமுடன் குறமகள் தந்த
தினை இந்த பொட்டலத்தில் இருக்கிறது.
என்ன கூழுக்கும் பாடியவர்.
இன்று நினைக்கும் பாடிவிட்டு வந்திருக்கிறாள் என்று நினைக்கிறீர்களா?
சோழா கேள்!
நான் மன்னனிடம் இருந்து
பரிசில் பெறுவதற்காக மட்டும் பாடும் குறுகிய எண்ணம் உடையவள் அல்லள்.
யார் என்ன தருவார் என்ற எதிர்பார்ப்போடு கவிதை பாடுபவர் அல்லள்.
உப்புக்கும் பாடுவேன்.
அன்போடு புளியைத் தந்தாலும்
அதனையும் ஏற்றுக்கொள்ளும்
மனப்பக்குவம் எனக்கு உண்டு
என்றபடி கம்பரைப் பார்த்தார்.
அப்படியா கதை. இவையே சொல்லி விட்டாரா?
உண்மையாகக் தான் இருக்கும்.
பாடல் உங்களுக்காக..
"கூழைப் பலா தழைக்கப் பாட குறமகளும்
மூழாக்குழக்குத் தினை தந்தாள்
சோழா கேள்
உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் எந்தன் உள்ளம்"
பாடலைக் கேட்டதும் கம்பர் அப்படியே
வாயடைத்துப் போனார்.
இனி கூழுக்குப்பாடிய கூனக்கிழவி என்று
கம்பர் சொல்வாரா என்ன?
Comments
Post a Comment