பூசனிக்காயில் எத்தனை விதைகள் இருக்கும்?

பூசனிக்காயில் எத்தனை விதைகள் இருக்கும்?

நானும் தங்கையும்
புளியம் முத்து கையில் வைத்து
விளையாடிக் கொண்டிருந்தோம்.

 என் கையில்
எத்தனை முத்து இருக்கிறது சொல்
என்றாள் என் தங்கை
ஏழு என்றேன்.

இது தெரியாதா?
இதற்குப் போய் கல்லூரியிலா
படிக்க வேண்டும்?

எப்படி கண்டு பிடித்தாய்
சொல்லேன்....ப்ளீஸ் கெஞ்சினாள் தங்கை.

மாயமும் இல்லை மந்திரமும் இல்லை.
டொட்டொடொயிங்....
இவ்வளவு நேரம் ஏழுகல்
சுட்டிதானே விளையாடிக்கொண்டிருந்தாய். இதனால் முத்தும் ஏழுதான் வைத்திருப்பாய் என்று ஒரு ஊகத்தில்
சொன்னேன். சரியா என்றேன்.

இப்போது நான் ஒரு விடுகதை
போடுகிறேன் நீ விடுவி பார்க்கலாம்.

ஆரஞ்சு பழத்தில் எத்தனை விதைகள்
இருக்கும்?

ஆரஞ்சுப் பழத்தில் ஆரஞ்சு விதை
இருக்கும்.
விளையாடாதே....எத்தனை விதைகள் இருக்கும்
சரியாகச் சொல்.

சரியாகத்தான் சொன்னேன்.
ஆரஞ்சு விதைகள் தான் இருக்கும்.

என்னை என்ன  கேணச்சி
என்று நினைத்தாயா?

சரியாகத்தான் சொன்னேன்.
 ஆறு ஐந்து ஆரஞ்சு
விதைகள் .மொத்தம் பதினொரு விதைகள்
இருக்கும் அதனால்தான் அதற்கு
ஆரஞ்சு என்று பெயர்.
புரிகிறதா?எனக்குப் பாடம்
எடுத்தாள் என் தங்கை.
இவளை எப்படியாவது மடக்க
வேண்டுமே...என்ன செய்யலாம்?   
என்ன செய்யலாம்...
மண்டைக்குள் என்னவெல்லாமோ சிந்தனை ஓடியது.

அப்படியானால் ஆரஞ்சு கலரில்
இருப்பதால் அந்தப் பெயர் இல்லையா?
சரி விடு .நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?
என்று கேட்டேன்.

கேளு... முடிந்தால்
சொல்கிறேன் என்றாள்.

பூசணிக்காயில் எத்தனை விதைகள் இருக்கும்?

எத்தனை விதைகள் இருக்கும்?...
எத்தனை விதைகள் இருக்கும்?..
ம்...நிறைய விதைகள் இருக்கும்.
இதுவரை எண்ணிப் பார்த்ததில்லையே...
நீ எண்ணிப் பார்த்திருக்கிறாயா?

நானும் எண்ணிப் பார்க்கவில்லை...

உனக்கும் தெரியாதா?
உனக்குத் தெரியாமல்தான்
என்னிடம் கேட்கிறாயா?

ஏன் எண்ணிப்பார்க்க வேண்டும்?
ஒரு கணக்கு போட்டு பார்த்துவிட
 வேண்டியதுதானே!
 
கணக்கு அது என்னக் கணக்கு...?

கணக்கதிகாரத்தில்  ஒரு பாடல் இருக்கிறது.
அது பூசனிக்காய்க்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன 
என்பதைப் சொல்லித் தருகின்றது.

இதோ பாடலைப் சொல்கிறேன் நீயே கணக்குப்
போட்டுப் பார்த்து விடையைச் சொல்.

"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றைஞ்சு தன்னில் மிகப் பெருக்கி
பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல் "


ஒரு பூசனிக்காயின் கீற்றுகளை எண்ண வேண்டும்.
அந்தக் கீற்றுக்களின் எண்ணிக்கையை முறையே மூன்று ஐந்து ஆறு ஆகிய எண்களால் பெருக்க வேண்டும்.
இப்போது பெருக்கி வரும் விடையை
இரண்டால் வகுக்க வேண்டும்.
இப்போது பெருக்கற்பலன்
பாதி ஆகிவிடும்.
அதன் பின்னர் இந்த எண்ணை
மூன்றால் பெருக்கினால் கிடைப்பது
பூசனிக்காயினுள் இருக்கும்
விதைகளின் எண்ணிக்கை ஆகும்.

பாடல் சொல்வது சரி.
பூசனிக்காய் விதை இந்தப் பாடலில்
சொல்லியதுபோல எண்ணிக்கையில்
சரியாக இருக்குமா?
நீ சரி பார்த்தாயா?

இல்லை...இனிதான் எண்ணிப்
பார்க்க வேண்டும்.

பார்த்துவிட்டு சொல் ஒத்துக்கொள்கிறேன்.


பூசனிக்காயில் வாங்கி வந்துவிட் டோம்.
உள்ளே எத்தனை விதை இருக்கின்றன?

Comments

Popular Posts