முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல்.....

முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல்...


"முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு "

                                குறள் 1274

முகை - மலரும் பருவத்து அரும்பு
மொக்குள் -மொட்டினுள்
‌உள்ளது - இருப்பது
நாற்றம்போல் - மணத்தைப் போன்று
பேதை - பெண்
நகைமொக்குள் - நகைமுகிழ்பில் 
உள்ளதொன்று  - குறிப்பொன்று
உண்டு - இருக்கிறது

மலரும்பருவத்து அரும்பிற்குள் பொதிந்திருக்கும்
மணம்போல  இப்பெண்ணின்
நகைமுகிழ்பில் உள்ளதாகிய
குறிப்பொன்று
உண்டு.


விளக்கம்:

பூவானது மலரும் பருவத்திற்கு முன்னர்
அரும்பாக இருக்கும்.
அரும்பினுள் மணம் பொதிந்திருக்கும்.
அந்த மணம் வெளியில் 
தெரிய வராது
.எப்போது பூவானது தன் 
இதழ்களை விரித்து
மலர்கிறதோ அப்போது மணம்
பரவ ஆரம்பிக்கும்.
அதுபோல இந்தப் பெண் இதழ்
விரியாது மெல்ல இதழ் குவித்து
புன்னகைக்கிறாள்.
இவள் நகைமொக்குள் மலரின்
முகைமொக்குள் போன்றிருக்கிறது.
அவளுடைய நகைமுகிழ்ப்பில்
காதல் குறிப்பொன்று 
மறைந்திருக்கிறது.

முகைமொக்குளுக்குள் மணம்
இருக்கிறது.
நகை மொக்குளுக்குள் காதல்
மணம் இருக்கிறது அருமையான
உவமையைக் கையாண்டுள்ளார் வள்ளுவர்.


English couplet 

"As pragrance in the opening bud some secret lies
concealed in budding simle of this dear damsel's eyes"


Explanation :

There is something in the immatured smile of this maid
like the fragrance that is concealed in an
unblossomed bud.


Transliteration :

"Mukaimokkul Ulladhu Naatrampol Pedhai
Nakaimokkul ulladhon runtu"







Comments

Popular Posts