வெள்ளிவிழா வாழ்த்து


வெள்ளிவிழா வாழ்த்து

வாழும் நாட்கள் வரமாக
வாழ்க்கை என்றும் இனிதாக
இணைத்தார் இறைவன் துணையாக
இருபத்தைந்து ஆண்டுகள் உவப்பாக
வந்தது வெள்ளிவிழா மகிழ்வாக
வசந்தம் வீசும் நறுமணமாக  
வாழ்வாங்கு வாழ்வீர் இணையாக 
வாழ்நாள் எல்லாம் அருட்பணியாக
வரமாய் தொடரட்டும்  அர்ப்பணிப்பாக
ஸ்தேவான் திருச்சபை  சிறப்பாக
செய்த பணிகள்  நினைவாக
வாழ்த்தி மகிழ்கிறோம்  நிறைவாக!

            -செல்வபாய் ஜெயராஜ் 

Comments

Popular Posts