பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்        திருமிகு. மு. தவமணி B.Sc.B.Ed,
       கே.டி.காய்க்வாட் தமிழ்ப் பள்ளி.
      சயான்  கோலிவாடா
       மும்பை.

பணி ஓய்வு : 01.06.2023

மின்னணு மிகைபுகழ்  கூடங்குளம் பேருலா
முன்னடிநாடார் பஞ்சுப்பழம் அம்மாள் இணையிலா
முன்னவர் குலம் விளங்க வந்த பிள்ளைநிலா
சின்னவர் செவியோதிய தவமணி பெயர் புகழுலா!

கள்ளுலா ரதிலலிதா கண்ணுலா வந்தலா(ல்)
காதலா(ள் ) கரம்பிடித்தலா கன்னி மனையாதலா
கட்டிலா தொட்டிலா பிள்ளை நால்வராதலா(ல்)
மட்டிலா  மகிழுலா மனையில் ஆட்சி நடத்தலா!

கர்மவீரர் பள்ளியில் தடம் பதித்தலா (ல்)
கர்மமே கண்ணெனக் கடுமையாய் உழைத்தலா
வன்மம் கொள்ளா வாழ்க்கைத்துணை வழிகாட்டலா(ல்)
தர்மமும் தயையும்  தவமணியின் கரம்பிடித்தலா!

கலைகள் யாவும் உள்ளிலா தலைச் சோற்றிலா
மலையாய் உயர்வுலா மாறா நேசரின் அருளிலா
அலையிலா மனம் ஆர்ப்பரிப்பிலா ஆனந்தத் துள்ளலா
விலையிலா நட்புலா காண்டலா(ல்) மனம் மகிழ்ச்சி கடலிலா!

தவம் உன்றன் பெயரிலா செயலிலா
அறம் நின் அறப்பணியிலா அர்ப்பணிப்பிலா
விஞ்சு மதியுலா மிஞ்சு மொழியிலா பேச்சிலா
கஞ்சமாய்ப் புகழ்தலால் பஞ்சம் என் சொல்லிலா!

நாலேழு ஆண்டு நற்பணி நடத்தலா(ல்)
நல்லோர் ஏத்தலா(ல்) நற்புகழ் வாய்த்தலா
தொய்வில்லா தொடர்பணியால்  தளர்தலா அயர்தலா
அயர்வறியா தமிழுக்கு அணையிட ஓய்வென்று உரைத்தலா!

ஈடில்லா இறை அருள் இல்லம் நிறைத்தலா(ல்)
எண்ணில்லா வளங்களால் கரம் குவித்தலா
தளை நீக்கலா(ல்) மனம் துள்ளலா(ல்) வானம் தொட்டலா
கண்டுலா  வந்தது வாழ்த்துச் செய்தியொன்று சிற்றுலா!

                                                              --  செல்வபாய் ஜெயராஜ்Comments

Popular Posts