செவியிற் சுவையுணரா....

செவியிற் சுவையுணரா...

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் "

                              குறள்- 420

செவியிற்-காதினால் கேட்டறியும் 

சுவையுணரா - அறிவுச் சுவை அறியாதவர்

வாயுணர்வின் -வாயால் உண்ணும் 
                                 உணவின் சுவை அறியும்

மாக்கள் - விலங்குப் பண்பு கொண்ட
                     மக்கள்
அவியினும் - இறந்தாலும்

வாழினும் -வாழ்ந்தாலும்

என் - என்ன


செவிச்சுவை இல்லாமல்
வாயினால் நுகரும் 
உணவின் சுவை மட்டும்
அறியும் பகுதறிவில்லா மக்கள்
 இருந்தாலும் இறந்தாலும்
 என்ன பயன்?


விளக்கம்:

செவிச்சுவை என்பதுசொற்சுவை, பொருட்சுவை என இருவகைப்படும்.
சொற் சுவை 
பொருட்சுவை  இரண்டும் கேட்டு அறியும்
சுவையின் பாற்படும்.

வாயின் சுவை அறுசுவைகளாகும்.

ஒருவன் செவிச்சுவை அதாவது கேள்வி அறிவு
இல்லாதிருக்கிறான்.
உணவின் சுவை அறியும்
திறன் மிகுதியாக இருக்கிறது.
இருந்து என்ன பயன்?
செவிச்சுவை இல்லையே.
அப்படியானால் 
அவன் பகுத்தறியும் பண்பில்லாதவனாகத்தான் இருப்பான்.

மனிதனாக இருக்கும் தகுதி 
என்னவென்றால் அவனுக்கு கேள்வி அறிவு
இருக்க வேண்டும். அது இல்லையா அவன் மனிதன் அல்லன். மாக்கள் 
என்ற நிலைக்குத் தள்ளப்படுவான்.
கேள்வி அறிவு மட்டுமே ஒருவனை
மனிதன் என்று அடையாளப்படுத்தும்.

அதோடு திருவள்ளுவர் விட்டுவிடவில்லை.
செவிச்சுவை நுகரும் ஆற்றல்
இல்லா ஒருவன் இவ்வுலகில் இருந்தால் என்ன?
இல்லாது போனால் என்ன?
அவனால் யாருக்கும் எந்தவொரு பயனும் 
நடக்கப்போவதில்லை.


அவன் இருப்பதும் ஒன்றுதான்.
இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்.
என்கிறார்.
கற்றலின் கேட்டல் நன்று 
அதனால் 
கேள்வி அறிவு வேண்டும் என்று
சொன்ன வள்ளுவர் அந்தக் கேள்வி அறிவு 
மட்டும் இல்லையா
நீ மனிதனே இல்லை என்று 
உச்சந்தலையில் அடித்து
உரக்கச் சொல்லி முடித்துவிட்டார்.

அவியினும் வாழினும் என்?
என்ற கேள்வியை நம்முன் வைத்து 
நீங்களே பதிலைச் சொல்லுங்கள்
என்று நம்மைப் பார்த்துக் கேட்டு
குறளை முடித்திருக்கிறார்.

சிந்திக்க வைக்கும் அருமையான
குறள் இல்லையா?



English couplet 

"His mouth can taste,but ear no taste of joy can give ! What matter if he die,or prosperous live?"

Explanation

What does it matter whether those men live or die,who can judge of taste by the mouth, and not by the ear?

Transliteration 

"seviyiR suvaiyuNaraa vaayuNarvin maakkaL aviyinum vaazhinum en"
 

Comments

Popular Posts