பிறந்தநாள் வாழ்த்து கவிதை
பிறந்தநாள் வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்துப் பாடலா
கைபேசி கலகலவெனச் சிரித்து
ஒத்தைச் சொல்லால்
ஓயா இசையில் நனைத்தலா
இறையருள் இல்லம் நிறைத்தலால்
இன்பம் நிரந்தர குடியுரிமை வாங்கலா
நலமும் வளமும் கூட்டாட்சி நடத்தலால்
நிலைத்த புகழ் உனக்குரித்தாதலா
கண்டுலா வந்திட விழைதலால்
என்றன் வாழ்த்துலா வந்தது
இன்பச் சிற்றுலா
வாழ்க...பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரம் ஆண்டு
வளர்பிறையன்ன வளர்நிலை கண்டு!
-செல்வபாய் ஜெயராஜ்
Comments
Post a Comment