பிறந்தநாள் வாழ்த்து



பிறந்தநாள் வாழ்த்து 


தேனுலா தமிழுலா தேடலா(ல்)

வானுலா மதியுலா

வாழ்த்துப் செய்தி வாசித்தலா!


தத்தை மொழி  கற்றலா(ல்)

ஒற்றைச் சொல்லில்- கைபேசி

ஓயாது வாழ்த்துப் பாடலா!


மிஞ்சி  ஒலிப்பது பேச்சிலா

விஞ்சும் அன்பிலா-உள்ளில்

எஞ்சி இருக்கும் நட்பிலா!


 வரையிலா அன்பு   நடத்தலா(ல்)

 கரையிலா நட்பு பேணலா -நடப்பவை

கறையிலா உள்ளம் நினதாதலா!


கண்டுலா  வந்திட விழைதலா(ல்)

கவியுலா வந்தது- இன்று

கவினுலா இன்பச் சிற்றுலா!


வானும் நிலனும் போல

வாழ்க பல்லாண்டு...பல்லாண்டு

இன்றுபோல என்றும் உவந்து!


                   - செல்வபாய் ஜெயராஜ் 





Comments

Popular Posts