சொல்லால் வென்றவன் வரலாறு
சொல்லால் வென்றவன் வரலாறு " சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து" என்றார் வள்ளுவர். நாம் பேசுகிற சொல்லை இன்னொரு சொல் வெல்ல முடியாது என்பதைத் தெரிந்த பின்னரே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் நமது சொல்லில் யாரும் குற்றம் கண்டுபிடித்துவிடக் கூடாது. நமது சொல்தான் இறுதித் தீர்ப்புக்கு உரியதாக இருக்க வேண்டும். உள்ளங்களை வெல்லும் சொல்லாக இருக்க வேண்டும். "ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்" என்று சொல்வார்கள் . " வெல்லும் சொல்... கொல்லும் சொல் ... அனைத்தும் யாம் அறிவோம்.... என்கிறீர்களா?" "அனைத்தும் அறிந்து விட்டால் ... நீங்கள் பேசும் சொல் யாவும் வெல்லும் சொல் என்று ஆகிவிடுமா .? "வேறென்ன வேண்டும். சுட்ட சொல் வேண்டுமா ? சுடாத சொல் வேண்டுமா?" நீங்கள் சுட்ட சொல் என்றதும்தான் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. சிறுவன் ஒருவனிடம் நாவ...