நினைவோவியம்

நினைவோவியம் 

நேற்றைய கூடுகை
நிகழ்வுகள் நெஞ்சுக்குள்
பேரிகை இசைக்க
செல்வமணியின் உபசரிப்பும்
கரிசனமும் ஆறுமணி நேரப் 
பயணத்திற்கு அருமருந்திட்டு
ஆறுதல் படுத்தி நிற்க
பழைய நினைவுகள் 
மனதைத் தாலாட்ட 
இன்றைய நிகழ்வுகள் 
உரையாடலுக்குள் வந்து 
உவகையூட்ட
கருத்துப் பரிமாற்றங்கள் 
களிப்பூட்ட
கவின்மிகு காட்சிகள்
நினைவலைகளாக வந்து
நெஞ்சைத் தாலாட்ட
கவிக்குயில்களான
ஆசிரியைகள் 
சந்திரிகா 
ஞானம் செல்லப்பா
ஸ்டெல்லா 
தாமரைச்செல்வி
சுகந்தி இணைந்து நடத்திய 
இன்னிசை  கேட்டு
ஆசிரியர் ஸ்டீபன்
கைகள் தானாய்த் தாளமிட
விடுகதையா வாழ்க்கை என்று விடுகதைக்கு சுகந்தி 
விடை கேட்டு நிற்க
அசத்தலான 
விடை கூறி அனைவரும் 
கைத்தட்டலை மொத்தமாய் அள்ள
அங்கங்கே தொட்டுச் சென்ற
பேச்சுக்கு தடாயிட்டு
உணவின் அணிவகுப்பு வந்து இடைமறிக்க
அருசுவை உணவின் மணம்
நாசியைத் துளைக்க
கை தானாய்ச் சென்று 
வட்டிலிலுக்கும் 
வாய்க்குமிடையே
சண்டை மூட்டிவிட 
வயிறு போதுமென மறுக்க
போதாதென 
இனிப்பு  வந்து 
இடையூறு செய்ய
நாக்கு தாவா செய்து
நான்கைந்தை அள்ளி
உள்ளே தள்ள 
அன்றலர் மலரென
அகமமிழ் கொள்ள வந்த
அன்பு மகனும் மருமகளும் 
மனதைக் கொள்ளை கொள்ள
பரிசுகளை அள்ளித் தர
மனம் துள்ள
பூப்பூவாய்ப் பூத்த
புன்னகை முகங்களோடு
தோளில் கை போட்டு நடந்த
கடந்தகால நினைவுகளோடு
நல்லதொரு 
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பூரிப்பில் 
மனம் துள்ளலிட
நெஞ்சில் வரைந்து வைத்த
நினைவோவியதைச் சுமந்தபடி
நிறைவாய் மகிழ்வாய்
விடைபெற்று வந்தோம்
    -செல்வபாய் ஜெயராஜ் 

கருத்துகள்

Popular Posts