கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்


கொங்கு தமிழ் என்பது கோயம்புத்தூர்
வட்டார மக்கள் பேசும் வட்டார வழக்கு
 மொழி.
.
ஏனுங்கோ ....
வாங்கோ என்ற வீட்டுல
சாப்புட்டுபுட்டு போங்கோ
என்று மரியாதையாகப் பேசுவார்கள்.
 
அப்பச்சி என்று தாய்வழித் தாத்தாவை
அழைப்பதும் அப்பத்தாள் என்று
அப்பாவழி பாட்டியை அழைப்பதும்
இவர்கள் வட்டார வழக்கு.

கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர்,
ஈரோடு, 
நாமக்கல் , சேலம், தர்மபுரி, நீலகிரி,
கரூர், கிருஷ் ணகிரி மற்றும் திண்டுக்கல்
ஆகிய மாவட்டங்கள்
உள்ளன.

மொத்தம் 61 சட்டமன்ற தொகுதிகள்
உள்ளன.10 நாடாளுமன்ற
தொகுதிகள் உண்டு.

சோழர் ஆட்சியில்தான் இது கொங்கு மண்டலம்
என்று அழைக்கப்பட்டது.

"சோழநாடு சோறுடைத்து "
என்று சொல்வார்கள்.
மலையும் மலைசார்ந்த குறிஞ்சியும்
காடும் காடு சார்ந்த முல்லையும்
வயலும் வயல் சார்ந்த மருதமும்
விரவிக் கிடக்கும் அருமையான
வளமான நிலப் பகுதி அமைந்திருப்பது
சோழ மண்டலத்தின் வளமைக்குக்
இயற்கை தந்த கொடை என்றே
சொல்ல வேண்டும்.

வேறு எந்தப் பகுதியிலும் இத்தனை வளங்கள்
ஒருங்கே அமைத்திருக்கிறதா 
என்று பார்த்தால் இல்லை என்றுதான்
சொல்ல முடியும்..
ஆனால் கொங்கு மண்டலம் தான்
எல்லா வளங்களையும் ஒருங்கே 
பெற்ற ஒரு வளமான
பகுதி.

கொங்கு என்றாலே தேன், பூந்தாது,
குரங்கு என்று பலபொருள்கள் உண்டு.

இங்குள்ள மலைப்பகுதிகளில் தேன்
மிகுதியாகக் கிடைப்பதால் இப்பகுதிக்கு
கொங்கு என்பது காரணப் பெயராக
அமைந்திருக்கலாம் .

சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம்
ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்ததாம்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் விஜய நகரப்
பேரரசு 24 நாடுகளாக பிரித்து
ஆளப்பட்டதாம்.

கொங்கு மண்டலத்தில் பல நதிகளும்
திருத்தலங்களும் உள்ளன.
பவானி ஆறு,நொய்யல் ஆறு,
பொருனை ஆறு,திருமணி முத்தாறு,
என்று ஆறுகள் மிகுந்திருப்பதால் சோற்றுக்குப்
பஞ்சமில்லாதபடி மிகுதியாக நெல்சாகுபடி
செய்யப்படும் பகுதிகள் 
கொங்கு மண்டலத்தில் உள்ளன.

தமிழுக்குச் சிறப்பெழுத்து.  ' ழ'
என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்
கொள்வோம்.
கொங்கு தமிழுக்குச் சிறப்பு
எந்த எழுத்து தெரியுமா?
'ங' தாங்க கொங்கு தமிழுக்கு
சிறப்பு.
அவர்களுடைய பேச்சில் 
இந்த ங மறுபடியும் மறுபடியும் வந்து
நமக்குள் ஒரு மரியாதையை
ஏற்படுத்தும்.
ஙப்போல் வளை என்றார்
ஔவை. அந்தப் பண்பு 
எழுத்தில் மட்டுமல்ல சுற்றம்
தழுவுதல் என்னும் பண்பைப்
பேணுதலிலும் உண்டு.

வாங்கோ....சாப்பிடுங்கோ
என்று 'ங்கோ' போட்டு அழைப்பது தான் 
அவர்களுக்கான மரியாதையான சொல்.

அதுவும் சற்று அழுத்திக் பேசுவதை
படங்களில் கேட்டிருப்போம்.

அடுத்ததாக' ற' என்ற சொல்லும்
அவர்களுடைய பேச்சில் அதிகம் காணலாம்.
என்ற வீடு 
உன்ற தம்பி
என்பார்கள்.

அதுவும் சாதாரணமாக நாம் 
பேசுவதுபோல் ஒரு மாத்திரை அளவு
ஒலிக்காது.

'என்ற்அ' கமலகாசன் என்று கோவை
சரளா அவர்கள் அழுத்திச் சொல்லும்போதுதான்
அந்த' ற ' வுக்கே தனி மரியாதை
வந்தது போல் இருந்தது.
ஓ...இதுதான் கோவைத்
 தமிழா?
 என்று மறுபடியும் நம்மை உற்று 
 நோக்க வைத்தது இந்த 
 உச்சரிப்புதாங்க.
 
கோவைத் தமிழை எங்கள் வரை கொண்டு
சேர்த்த பெருமை
கோவை மாவட்டத்தைச் சார்ந்த
கலைஞர்களுக்கு உண்டு.

வாங்கோன்னா.....வாங்கோன்னா

கொங்கு தமிழை நாமும் கொஞ்சம்
தெரிந்துகொள்வோம்.

நெல்லைத் தமிழோடு ஒத்துப்போகும்
கொங்கு தமிழ்ச் சொற்கள் ஒருசில
உங்களுக்காக...


அகராதி- எல்லாம் தெரிந்ததுபோல நடப்பது
அகராதி- - திமிர் பிடித்தவள்(நெல்லை)

ரொம்ப அகராதி பிடித்தவளா இல்ல இருக்கிறா?


ஊட்டுக்காரி- மனைவி
வூட்டுக்காரி- (நெல்லை)

உங்க வூட்டுக்காரி வரலியா?(நெல்லை)

எகத்தாளம் - நக்கல்
எளக்காரம் (நெல்லை)

உங்களுக்கெல்லாம் எங்களைப் பார்த்தால்
எளக்காரமா இருக்கு என்ன?

என்ற- என்னுடைய
எனக்க- (நெல்லை)

ஏனம்- பாத்திரம்.

ஒரு ஏனத்துல கஞ்சி ஊற்றி வை.


கொரவளை - குரல்வளை
கொதவளை - நெல்லை
கொதவளைய நெருச்சிப்பூடுவேன்.

சாயங்காலம்- மாலை
சாயந்தரம், சாயங்காலம் (நெல்லை)

சாயங்காலம் பொழுது சாய வா.

சீக்கு- நோய்
சீக்காளி-நோயாளி(நெல்லை)

பெரியவரு சீக்காளியா படுக்கையில்
கெடக்காரு.

துழாவு- தேடு
துழாவு-(நெல்லை)

கையைப்போட்டு நல்லா துழாவிப் பாரு.

மலங்காடு - மலைப்பகுதி
மலங்காடு(நெல்லை)

மலங்காட்டுக்குப் போயி சுள்ளி பொறுக்கிக்
கொண்டு வந்தேன்.

வட்டல்-  சோறு உண்ணும் தட்டு
வட்டில்-(நெல்லை)

வட்டுலுல கஞ்சி ஊற்று. (நெல்லை)














Comments

Popular Posts