மருத்துவ மொழிகள்

மருத்துவ மொழிகள் 


உணவே மருந்து என்று சொல்வார்கள்.
நாம் உண்ணும் உணவுதான் நோய் வரவும்
காரணமாக இருக்கும். நோய் வராமலும் தடுக்கும்.

அதற்காக உணவில் சற்று கரிசனம்
எடுத்துக் கொண்டால் எளிதில்
எந்த நோயும் அண்டாது. அப்படியே நோய்
ஏற்பட்டாலும் அதற்கும் நமது உணவிலேயே மருந்து
இருக்கிறது.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன"

என்று சொல்லியிருப்பார் கணியன்
பூங்குன்றனார்.

அதாவது நன்மை நடைபெறுவதற்கும்
தீமை நடைபெறுவதற்கும்
நாம்தான் காரணமாம்.
அதுபோல ஒரு நோய் ஏற்படுவதற்கும்
நாம்தான் காரணமாம்.
நோயைக் குணப்படுத்தும் திறனும்
நம் கையில்தான் உள்ளதாம்.


இதைத்தான் மருத்துவ மொழிகள்
நமக்குச் சொல்லித் தருகின்றன.


பழமொழிகள் முன்னோர்களின்
அனுபவமொழிகள்.

அவற்றை வாசிக்கும்போது ஏதோ
எதுகை மோனைக்காக சொல்லி
வைத்தது போல் இருக்கும்.
ஆனால் அவற்றிற்கான மருத்துவ 
குணங்களை அறிந்து பின்னரே
இப்படிப்பட்ட பழமொழிகளை சொல்லி 
வைத்துள்ளனர் என்பதை நம்மாலும்
ஓரளவுக்கு உணர முடிகிறது.

கேள்விப்பட்டதுமட்டுமல்ல 
அனுபவப்பூர்வமாக சிலவற்றை உண்டு
அறிந்து கொண்டிருப்போம்.
அப்போதுதான் அடேங்கப்பா நமது
முன்னோர்கள் பொழுதுபோகாமல் எதுவும்
சொல்லி வைக்கவில்லை.

சமூக அக்கறையோடு
சொல்லப்பட்ட மொழிகள்தான் அத்தனையும்
என்பது புரியும்.
அதுமட்டுமல்ல உடல்நலம்
பேணலில் இயற்கை சார்ந்த முறையைக்
கையாண்டுள்ளனர் என்பது தெரிகிறது.


இதோ உங்களுக்காக சில மருத்துவ மொழிகள்:


அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நன்றி.


"முருங்கை உண்ண 
நொறுங்குமாம் மேகம்"


"  வல்லாரை இருக்க 
 எல்லாரும் சாவதேன்"
          

 "வாழை வாழ வைக்கும்."

" வெங்காயம் உண்பார்க்குத் 
  தன் காயம் பழுதில்லை."
          
 " பத்து மிளகு இருந்தால் 
 பகைவன் வீட்டிலும் உண்ணலாம்"

 "மாதா ஊட்டாததை மா ஊட்டி விடும்."

"பசி வந்திட பத்தும் பறந்து போகும்."

" சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை."
     

"காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு
 மாலையில் கடுக்காய் "

"முருங்கைக்கீரை முட்ட வாயு
 அகத்திக்கீரை அண்ட வாயு."

 " முருங்கைக்கீரை வெந்து கெட்டது.
 
  "அகத்திக்கீரை வேகாமல் கெட்டது."

 "கூழானாலும் குளித்துக்குடி"


"விருந்தும் மருந்தும் 
மூன்று நாளைக்குத்தான்"

"நொறுங்கத் தின்றால் நூறு வயது" 
   
"பசி வந்தால் பத்தும் பறந்து போகும்."

"பசி ருசி அறியாது."

" உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே "
              
"பொய் சொன்ன வாய்க்கு
 போஜனம் கிடைக்காது."


"ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம்."


"எள்ளாக இருந்தாலும் 
ஏழாக பகுத்து உண்."
      

"பசிக்காக சாப்பிடு 
ருசிக்காக சாப்பிடாதே"

   
"படுக்கை காபி
படுக்கையில் தள்ளும்"

"சூரியன் ஒளி படாத இடம்
 வைத்தியர் வருமிடம்"

" வெங்காயம் உண்பார்க்குத் தன்காயம்
   பழுதில்லை"  





   

Comments

Popular Posts