பகல் கருதிப் பற்றா செயினும்.....

பகல் கருதிப் பற்றா செயினும்....


பகல் கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை"

                  குறள் :  852

பகல் - வேறுபாடு
கருதி - எண்ணி
பற்றா - வெறுப்பன
செயினும் -செய்தானாயினும்
இகல் - மாறுபாடு
கருதி - குறித்து
இன்னா - தீங்கு
செய்யாமை - செய்யாதிருத்தல்
தலை- சிறப்பு.

நம்மோடு மனம் வேறுபட்டு ஒருவன்
விரும்பத்தகாத செயலைச் செய்தாலும்
நாம் அவனோடு  மாறுபாடு கொள்ளாது
அவனுக்கு எதிராக தீமை செய்யாதிருத்தலே
சிறப்பு.

விளக்கம் :

ஒருவன் செய்கிற செயலில்  நமக்கு
உடன்பாடு இல்லாது இருக்கலாம்.
அவனுக்கு நம்மீது நல்லெண்ணம்
இல்லாதபோது வேறுபாடு கருதியே 
அவன் நமக்கு எதிரான ஒரு
செயலைச் செய்கிறான்.
அதற்காக நாமும் அவன் செய்ததுபோலவே
அவனுக்கு எதிரான தீமையான செயல்களைச்
செய்துவிட்டால் என்ன நிகழும்?
பழிதான் வந்து சேரும்.

அவன் மனம் ஒத்துப் போகாத காரணத்தால்
எனக்கும் அவனோடு  மாறுபாடு
உண்டு .நானும் அவனுக்கு எதிராக
தீங்கு செய்து விடுவேன்
என்ற நினைப்பு ஏற்படுவது தவறு.
அந்த நினைப்பு நம்மைப் பழிக்குப்பழி
செய்ய வைக்கும்.
அப்படி தீங்கு செய்துவிட்டால் நமக்கும்
அவனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
இருவருமே பழிக்குப்பழி 
தீர்த்துக்கொள்பவர்களாகவே
இருப்போம்.
தீமையைத் தீமையால் வெல்ல
நினைப்பது அறிவார்ந்த செயலாக
இருக்க முடியாது.
அல்லவை நல்லவற்றால்
வெல்லப்பட வேண்டுமே தவிர
தீமையால் அல்ல.

அதனால் 
நம்மோடு மனம் மாறுபாடு கொண்டு
தீமை செய்தவருக்கு
எதிராக நாமும் மாறுபாடு கொண்டு
தீமை செய்யாதிருப்பதே உயர்வான
செயலாகக் கருதப்படும்
என்கிறார் வள்ளுவர்.

வேறுபாடு கொண்டாரோடும் 
மனம் மாறுபாடு கொண்டு 
தீமை செய்யாதிருப்பதே சிறப்பு.


English couplet :

"Though men disunion plan and do thee much dispite
'Tis best no enmity to plan , nor evil deeds requite"


Explanation :

Though disagreeable things may be done from
(a feeling of )disunion , it is far better that
nothing painful be done
from that of hatred. 

Transliteration :

"pakalkarudhip patraa seyinum ikalkarudhi
Innaasey yaamai thalai"

Comments

Popular Posts