எற்றென் றிரங்குவ செய்யற்க.....

எற்றென் றிரங்குவ செய்யற்க....


"எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று "

            குறள் :655

எற்று -  என்ன செய்தோம்
என்று- என்பதாக 
இரங்குவ- வருந்தும்படியான
செய்யற்க- செய்யாதிருப்பீராக
செய்வானேல்- செய்யானேயால்
மற்று -மறுபடியும்
அன்ன - அத்தன்மையதான செயல்கள்
செய்யாமை- செய்யாதிருத்தல்
நன்று- நல்லது


 இப்படி தவறு செய்துவிட்டேனே
என்று பின்னர்  எண்ணி வருந்தும் படியான
செயல்களைச் செய்யக்கூடாது.
அப்படியே ஒருவேளை செய்துவிட்டாலும் 
மீண்டும் அப்படிப்பட்ட செயலைச்
செய்யாதிருத்தல் நன்று.



விளக்கம் :

சில நேரங்களில் நாம் ஏதாவது
தவறு செய்துவிடுவோம்.
செய்து முடித்த பின்னர்தான் அது 
தவறு என்று நமக்கே புரியும்.
இப்படி செய்து விட்டேனே என்று
எண்ணி எண்ணி  
வருத்தப்பட்டிருப்போம்.
இது இயல்பாகவே அனைவர் வாழ்விலும்
நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்வுதான்.
போகட்டும் விட்டுவிடுங்கள்.
தவறு என்பதை உணர்ந்து 
விட்டீர்களல்லவா? மறுபடியும் அதையே
நினைத்து வருந்துவதால் எந்த
நன்மையும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

மறுபடியும் அதுபோன்ற
 தவறு செய்யாமல்
கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்.அதற்காக செய்த தவறினையே
 நினைத்து நினைத்து
வருந்துவதால் ஒரு பயனுமில்லை.

"எதற்காக இவ்வாறு செய்தேன் என
வருந்தும்படியான செயல்களை
  ஒருபோதும் செய்ய வேண்டாம்.
  ஒருகால் அப்படி
ஒரு செயலைச் செய்துவிட்டால்
மறுபடியும் அதுபோன்ற செயல்
செய்யாமல் இருத்தல் நன்று"
என்கிறார் வள்ளுவர்.


English couplet:

"Do nought that soul repenting must deplore,if thou hast sinned
'tis  well if thou dost sin no more"


Explanation:

Let minister never do acts of which he would have
to grieve saying," what is this l have done;
But should he do them, if were good that
he grieved not.


Transliteration:

"yettentu eranguva seyarka seyvaanel
mattanna seyaamai nantru"




Comments

  1. இயல்பாக வாழ்க்கையில் நடக்கும் செயல்களை தகுந்த குறளை சுட்டிக்காட்டி பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts