கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.....

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்....


"உன் நண்பன் யார் என்று சொல்
நீ யார் என்று சொல்கிறேன்"
என்பார்கள்.

நண்பன் எப்படியோ அப்படித்தான் அவன்
சேர்க்கையும் இருக்கும் . இதைத்தான் இப்படிச்
சொல்லியிருக்கிறார்கள்.

நட்பு யாரோடு அமையும்?
என்னென்ன காரணங்களுக்காக
அமையும்? என்று அலசி ஆராய்ந்து பார்த்தால்
ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லலாம்.
உதவிக்காக...பணத்துக்காக....
ஒரே கருத்து இருப்பதற்காக.....
என்று மாறுபட்ட கருத்துக்களை
முன்வைக்கலாம்.
ஆனால் அதிகப்படியான வாக்குகள்
யாருக்குக் கிடைக்கும் என்றால்
ஒத்திசைவு  அதாவது ஒத்தக் கருத்துகொண்டோர் 
மாட்டு மட்டுமே
நட்பு அமையும்  என்ற கருத்துக்காகத்தான்
இருக்கும்.

எப்போதுமே ஒத்த குணத்தாரோடு
மட்டுமே சேர்க்கை ஏற்படும்.
இது இயல்பாக அமையும் ஒரு செயல்
என்றுதான் சொல்லவேண்டும்.

மூடனோடு அறிவாளி கைகோர்த்துச் சென்றால்
பார்ப்பவருக்கே வேடிக்கையாக இருக்கும்.
ஒரு புதுமை நடைபெறுவது போல
வினோதமாகப் பார்ப்போம்.

ஒத்திசைவு இருந்தால் நாட்டமும்
ஈர்ப்பும் தானாய் நிகழும்.

தேனீக்களுக்குத் தேன் இருக்கும்
இடம்தான் விருப்பமாக இருக்கும்.

வண்டுகளுக்கு மலர்மீது
ஈர்ப்பு உண்டு.

பயன் கருதியாகக்கூட இருக்கலாம்.

வண்டுகள் பூக்களைச் சுற்றி
முரலுவதைப் பார்த்திருப்போம்.
கருத்திசைவு, ஒத்திசைவு ,பயனிசைவு
இப்படி ஏதோ ஒரு இசைவின் 
அடிப்படையில் ஈர்ப்பு
நிகழும்.

இதை எப்படிச் சொல்லித் தருவது?
 என்று ஆராய்ந்தால் ஆளுக்கொரு பாடலைச்
 சொல்லி என்னைத் திசைதிருப்பப்
 பார்த்தனர்.
எனக்கு ஈர்ப்பு ஔவை பக்கம் இருந்ததால்
வேறு எந்தப்பக்கமும் திரும்பாமல்
ஔவை பக்கம் திரும்பினேன்.

அழகானப் பாடலொன்றைப் பாடி
 கையில் கொடுத்தார் ஔவை.

என்னை ஈர்த்த ஔவையின் பாடல் 
இதோ பாடல் உங்களுக்காக..."நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம் 
சேர்ந்தார்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் -
கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்
முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்"

      - மூதுரை: பாடல் 24


"குளத்தில் பூத்திருக்கும் தாமரை
மலரோடு அன்னப்பறவை சேர்ந்திருக்குமாம்.
அதுபோல கற்றவரோடு சேர்ந்திருக்க
கற்றவர் மட்டுமே விரும்புவராம்.

மூடர்களோடு மூடர்கள்தான் சேர்வர்.
இது எப்படி இருக்கிறது என்றால்
சுடுகாட்டுப் பிணத்தைச் சுற்றி
காகங்கள் அமர்ந்திருப்பது போல
இருக்கும் " என்கிறார் ஔவை.


உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார்
ஔவை.

அருமையான பாடல் இல்லையா?Comments

Popular Posts