முரண் தொடை


முரண் தொடை 


எழுத்தை அசையாக்கி
சீராய் அமைத்து
தளையால் கட்டி
அடிதொறும் தொடையால்
அணி செய்து படைப்பது
செய்யுளாகிறது.

இப்படிப்பட்ட பாடல்கள் 
படிப்போரைக் கட்டி இழுக்கும்.
மறுபடி மறுபடி என்னைப்படி என்று
என்று அழைக்கும்.
தூக்கத்திலும் அசைபோட வைக்கும்.

எழுத்து
அசை 
சீர்
தளை
அடி 
தொடை 
ஆகிய ஆறு உறுப்புகளால்
செய்யுள் கட்டப்படுகிறது.

இவற்றுள் தொடை என்ற உறுப்பின்கீழ் வரும்
முரண் தொடை பற்றி காண்போம்.

அடிகளிலோ சீர்களிலோ சொல்லோ பொருளோ 
மாறுபட்டு அமைவது முரண் தொடை எனப்படும்.


எடுத்துக்காட்டாக 
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்."

என்ற தொடரை எடுத்துக் கொள்வோமானால்
முற்பகல், பிற்பகல் என்று இரண்டு
முரண்பட்ட சொற்கள் வந்துள்ளன.
இவ்வாறு மாறுபட்ட பொருள்தரும்
சொற்கள் அமைவதை முரண் தொடை
என்கிறோம்.

நன்மை - தீமை
இரவு - பகல்
காலை - மாலை
இருள் - ஒளி
மேடு _ பள்ளம்
வாழ்வு - தாழ்வு
இகழ்ச்சி - புகழ்ச்சி
இன்னா - இனிய
இன்பம் - துன்பம்
கருமை - வெண்மை


இப்படி பொருள் மாறுபட்டு வருவதை
பொருள் முரண் என்கிறோம்.


சொல்லும் பொருளும் முரணுதல்
ஐந்து வகைகளில் அமைதல் உண்டு.

முதலாவது சொல்லும் சொல்லும்
முரணுதல்.

இரண்டாவது பொருளும் பொருளும்
முரணுதல்.

மூன்றாவது சொல்லும் பொருளும்
சொல்லொடு முரணுதல்.

நான்காவது சொல்லும் பொருளும்
பொருளொடு முரணுதல்.

ஐந்தாவது சொல்லும் பொருளும்
சொல்லொடும் பொருளொடும்
முரணுதல்.

முரண்தொடையானது

1. அடி முரண்
2. இணை முரண்
3. பொழிப்பு முரண்
4. ஒரூஉ முரண்
5. கூழை முரண்
6. மேற்கதுவாய் முரண்
7. கீழ்க்கதுவாய் முரண்
8. முற்று முரண்

என எட்டு வகையாக வரும்.


1. அடி முரண் : 

"அடிதோறும் சொல்லினும் பொருளினும்
முரணுதல் முரணே "
            
என்கிறது தொல்காப்பியம்.

அடிதோறும் முதற்சொல் மாறுபடத் 
தொடுப்பது அடி முரண்
எனப்படும்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை


2. இணை முரண் : ( 1 , 2 )

ஓரடியின் முதல் இரண்டு சீர்களில்
முரண் அமைவது இணை முரண்
எனப்படும்.

"பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனில் "


3. பொழிப்பு முரண் : ( 1, 3 )

ஓரடியில் முதற்சீர் மற்றும் மூன்றாம்
சீர்களில் முரண் அமைவது
பொழிப்பு முரண் எனப்படும்.

"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு "

4. ஒரூஉ முரண் : ( ( 1 , 4 )

ஓரடியின் முதலாம் மற்றும் நான்காம்
சீர்களில் முரண் அமைவது ஒரூஉ முரண்
எனப்படும்.

"புறந்தூய்மை நீரின் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும் "

5. கூழை முரண் : ( 1, 2 3 )

ஓரடியின் முதல் மூன்று சீர்களிலும்
முரண் அமைவது கூழை முரண்
எனப்படும்.

கருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்றன் என்னும்

6. மேற்கதுவாய் முரண் : (1 , 3 , ,4 )

ஒன்று , இரண்டு மற்றும் நான்காம்
சீர்களில் முரண் அமைவது மேற்கதுவாய்
முரண் எனப்படும்.

வெண்வளைத் தோளும் சேயரிக் கருங்கண்ணும்

7. கீழ்க்கதுவாய் முரண் : ( 1 , 2 ,4 )

முதல், இரண்டு மற்றும் நான்காம்
சீர்களில் முரண் அமைவது கீழ்க்கதுவாய்
முரண் எனப்படும்.

இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும்

8. முற்றும் முரண் ( 1 , 2 , 3 , 4 )

ஓரடியின் நான்கு சீர்களிலும் முரண் அமைவது
முற்றும் முரண் எனப்படும்.

"காலை மாலையும் இரவும் பகலுமென
ஓயா மழையில் ஓடையான தெரு "


சொல்லும் சொல்லும் முரண்பாட்டு வருதல்
பொருளும் பொருளும் முரண்பட்டு வருதல்
சொல்லும் பொருளும் சொல்லோடு 
முரண்பட்டு வருதல் 
சொல்லும் பொருளும் 
பொருளோடு முரண்பட்டு வருதல்
சொல்லும் பொருளும்
 சொல்லோடும்
பொருளோடும் முரண்பட்டு வருதல்
இப்படி ஐந்து வகையாக முரண்தொடை
அமையும் என்பதை மனதில் 
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

முரண்தொடை பற்றிய தெளிவு
கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

  Comments

Popular Posts