பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து


விண்மீன்கள் ஒளிசிந்த
விடிந்ததொரு பொன்னாளென
வீசுஇளம் தென்றல் வந்து
எடிசன் ஐயா காதோடு கவிபாட
விசும்பின் வீழ்த் துளியென
விடை காணா நாள்கள்
வாழ்ந்தின்பம் காண்கவென
வான்மழையும் வாழ்த்துரைக்க
கிண்கிணியெனக் கைபேசியும்
அணிவகுத்து நின்று
அணிசெய் நாயகனுக்கு
அணியம்செய் மொழியெடுத்து
அழகாய் வாழ்த்தி நிற்க
ஓய்விற்குப் பிறகும் ஓய்ந்திராது
ஓய்ந்தவரென்று எம்மையும் ஒதுக்கிடாது
ஓரணியில் ஒருங்கிணைத்து
ஓடி வந்து உதவி வரும்
உயர்ந்த உள்ளம் பேருள்ளம்
பெருமிதத்திற்குரிய உள்ளம்
நெடுவரையன்ன நிலைத்த புகழடைந்து
தொடர்பணி தொய்வில்லாது செய்துவர
இறையருள் என்றென்றும் 
இல்லம் தங்கிட
இருகரம்கூப்பி வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு ... பல்லாண்டு
பல்லாயிரம் ஆண்டு
இன்றுபோல் என்றும் மகிழ்ந்து !

Comments

Popular Posts