திருமண வாழ்த்து
திருமண வாழ்த்து
நன்றென இறைவன்
நினைத்திருக்க
நல்லருள் மணமகன்
கரம் பிடிக்க
சிறு புள்ளாய் மனம்
சிறகடிக்க
தேவதையாய் மணமகள்
உடன் நடக்க
ஆல்போல் வாழ்வு
தழைத்திருக்க
அருகுபோல் பரம்பரை
நிலைத்திருக்க
மூங்கில் போல் சுற்றம்
தழுவி நிற்க
இல்லறம் இன்பம்
இனித்திருக்க
வாழ்வீர் என்றும்
இணையாக!
வாழ்த்துகிறோம்
உறவுகள் மகிழ்வாக
வாழ்க பல்லாண்டு
நலமாக!
- செல்வபாய் ஜெயராஜ்
Comments
Post a Comment