தாசி பொன்னிக்கு...

தாசி பொன்னிக்கு.....


தாசி பொன்னிக்கு....இப்படியொரு

கடிதமா?

எழுதியது யார்?

கடிதத்தில் என்ன எழுதியிருக்கும்?

காதல் கடிதமாகத்தான் இருக்கும்.

படித்துவிட ஆசை.

ஆனாலும் உடனடியாகப் படித்துவிட

முடியுமா?

அக்கம்பக்கம் யாராவது பார்த்துவிட்டால்

தப்பாக நினைக்க மாட்டார்களா...

 சற்று தயக்கம்.

பொதுவெளியில் வெளியிடப்பட்ட 

கடிதத்தைப் படிப்பதற்கு என்ன தயக்கம்?

ஏன் அச்சப்பட வேண்டும்? இப்படி 

மனதைத் தேற்றிக்கொண்டு கடிதத்தின்

அடுத்தப் சொல்லைப் படித்தால்..

என்ன இது....இப்படி 

சற்றும் கூச்சமில்லாமல் எழுதியிருக்கிறார்.


மன்னனும் நீயோ?

வளநாடும் நின்னதோ?

இப்படித் துணிச்சலாக சொல்லி விட்டுச்

சென்றவரா இப்படியொரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.?


என்ன.... நாடாளும் மன்னனைப் பார்த்து

இப்படியொரு கேள்வியா?

என்ன துணிச்சல்?

இப்படிக் கேட்டது யார்?

யாருக்கு இப்படிக் கேட்கத்

துணிச்சல் வந்தது?

அறிய வேண்டும் போல இருக்கிறதல்லவா?

அறிந்து கொள்வோம்

வாருங்கள்.


புலவர்கள்  தன்மானம் மிக்கவர்கள். 

தங்கள் தன்மானத்திற்கு இழுக்கு 

ஏற்படும் 

இடத்தில் அவர்கள் தங்குவதில்லை.

தங்களை இகழ்பவர்களைப் புகழ்ந்து பாடுவதுமில்லை.


வறுமை இருந்தாலும் தன்நிலையிலிருந்து

கீழிறங்கி வந்துப் பொருள் பெற வேண்டும் என்று நினைப்பதில்லை.

தன் நிலையிலிருந்து  கீழிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டால்...

கன்னாபின்னா என்று பேசிவிட்டு

அங்கிருந்து வெறுங்கையோடு

போய்விடுவர்.

இதற்கு அந்தப் புலவர்

 இந்தப் புலவர் என்று எவரும் விதிவிலக்கல்ல.


புலவர்கள் அறம் பாடிவிட்டு சென்ற வரலாற்று

நிகழ்வுகளும் உண்டு.


கம்பர் மட்டும் விதிவிலக்கா என்ன?

புலவர்களுக்குள் எப்போதும்  ஒரு போட்டி

இருந்துகொண்டே இருக்கும்.

அந்தப் போட்டி பொறாமையாக மாறி

நீயா நானா என்று மோதிக்கொள்ளும்

நிலைக்குத் தள்ளப்பட்டு சொற்போரில்

இறங்கிய

புலவர்வர்கள் பலர் உண்டு.


அப்படிப்பட்ட பொறாமை மனநிலை சோழ அரசவையில்

இருந்த புலவர்களுக்கு கம்பர்மீது இருந்தது. கம்பரைக் குலோத்துங்கன் கொண்டாடுவது அரசவை  புலவர்களுக்குப் பிடிக்கவில்லை.

எப்படியாவது கம்பரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, கம்பனை சோழ

மன்னன் வெறுக்கும் படிச் செய்துவிட வேண்டும். அதற்கான தருணம் எப்போது வாய்க்கும் என்று காத்திருந்தனர்.

தங்களுக்கு ஏற்ற சந்தர்ப்பம் வாய்க்கும் போது அதனைத் தவறவிட்டுவிடக்கூடாது

என்று  முடிவோடு இருந்தனர்.


ஒருநாள்

கம்பரும் குலோத்துங்கன் சோழனும் 

பேசிக் கொண்டிருக்கின்றனர்.


அப்போது குலோத்துங்கன் இந்த நாடே எனக்கடிமை என்று பெருமையாகச் சொல்லிவிட்டு கம்பர் முகத்தைப் 

பார்த்தார்.


 கம்பர்  ஒரு நமட்டுச் சிரிப்பைப் பதிலாகத் தந்தார்.


"என்ன கம்பரே !நான் ஏதும் தவறாக

சொல்லிவிட்டேனா? சிரிக்கிறீர் "என்று கேட்டார் சோழ மன்னர்.


"இல்லை ....இல்லை தாங்கள் எதுவும் தவறாகச் சொல்லிவிடவில்லை.

 ஆனால்..."


"என்ன ஆனா...ஆவன்னா என்று

என்ன நினைக்கிறாரோ அதனைச் சொல்லும்."


"நாடே உங்களுக்கு அடிமை.

ஆனால் நீங்கள் எனக்கு அடிமை"

என்றார் கம்பர்.


குலோத்துங்கன் முன்னொரு முறை

கம்பரிடம் நான் கம்பனுக்கு அடிமை என்று சொல்லியிருந்தார்.

கம்பரின் பாடலுக்கு நான் அடிமை என்பதைத்தான் இப்படிச்

சொல்லியிருந்தார் 

அதை நினைவுபடுத்தத்தான் 

கம்பர் சிரித்தார்.


கம்பரின் மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட  குலோத்துங்கனின் முகம் அப்படியே மாறிப் போய்விட்டது.

அப்படியே விருட்டென்று அரண்மனைக்குள் சென்றுவிட்டார்.


இந்த நிகழ்வு குலோத்துங்கனின் மனதை

வாட்டிக் கொண்டிருந்தது.


அதனை அரசவைப் புலவரிடம் 

சொல்லிச் சொல்லி 

வருந்தினார்.


மன்னனுக்கும் கம்பனுக்குமிடையில் 

இருந்த நட்பில் சற்று விரிசல் விழுந்திருக்கிறது. இப்போது இதில்

 ஒரு ஆப்பைச் செறுகி

இந்த இடைவெளியைப் பெரிதாக்கிவிட வேண்டும்.

கம்பரை வெளியேற்றிவிட்டு நிரந்தரமாக தான் மட்டும் 

குலோத்துங்கன் அவைப் புலவராக இருக்க வேண்டும் .


அதற்கு என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்....என்று யோசித்தார்.


அப்போது கம்பர் பற்றி கேள்விப்பட்ட செய்தி ஒன்று நினைவுக்கு வந்தது.கம்பர் அழகானப் பெண்கள் வீட்டிற்குச் சென்று வரும் பழக்கம் 

கொண்டவர்.இது கம்பரின் பலவீனம்.கம்பரின் இந்தப் 

பலவீனத்தை வைத்து ஏதாவது களங்கம்  கற்பிக்கலாமா ...?

என்று நினைத்தார்.


அதுதான் சரி. 

 தாசி பொன்னியின் வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து கம்பரை அங்கு

வர வைக்கத் திட்டம் போட்டார்.


அதன்படி பொன்னியிடம் சொல்லி ஏற்பாடுகள் செய்தார்.

பொன்னியும் விருந்து வைக்கத்

தயாரானார்.

கம்பரும் பொன்னியின் வீட்டிற்குச் சென்றார்.

பொன்னி கம்பரை அருமையாக வரவேற்று

அமர வைத்தாள்.


இருவரும் உணவருந்திய பின்னர் சற்று நேரம் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.


அப்போது பொன்னி கம்பரிடம்

நீங்கள்  என் வீட்டிற்கு வந்ததின் 

நினைவாக எனக்கு

ஒரு வரம் தர வேண்டும் என்று 

கேட்கிறாள்.


கம்பரும் என்ன வரம் வேண்டுமானாலும்

தாராளமாக கேள். தருகிறேன் என்கிறார்.


இதுதான் நல்வாய்ப்பு என்று  நினைத்த பொன்னி ,

"தாசி பொன்னிக்குக் கம்பனடிமை" என்று எழுதித் தரும்படி கேட்கிறாள்.

சற்றும் எதிர்பாராத வேண்டுதல்.

ஆனால் கம்பருக்கு இதில் எந்தவித

தயக்கமும் இல்லை.


"அதனாலென்ன இதோ இப்போதே எழுதித்தருகிறேன் "என்று ஒரு ஓலையை 

எடுத்தார்.

அதில் தாசி பொன்னிக்குக் கம்பனடிமை என்று எழுதி கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் கம்பர்.

இதுதான் கம்பர் எழுதிய கடிதம்

அதாவது ஓலை.

கம்பரின் இந்த ஓலை புலவர்கள் மூலமாக

அரசன் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தது.


ஓலையை வாசித்த மன்னனுக்கு 

ஆச்சரியம்.கம்பரா இப்படி  எழுதிக்

கொடுத்தார் ?.நம்பமுடியவில்லை.


கம்பரை நேரில்

அழைத்து விசாரித்து உண்மையை

அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.


கம்பர் அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார்.

கம்பரும் வந்தார்.


மன்னனைப் பார்த்ததும்

"என்ன மன்னா !ஏதாவது பாடல் வேண்டுமா?"

என்று எதுவும் நடக்காதது போல 

சாதாரணமாகக் கேட்டார்

கம்பர்.


"நீர் இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்வீர் என்று நான் நினைக்கவில்லை" என்று கோபமாகப் பேசினார் மன்னர்.



"அப்படி என்ன கீழ்த்தரமாக நடந்து கொண்டேன்?"

திருப்பிக் கேட்டார் கம்பர்.


"இது என்ன"? என்று கையிலிருந்த ஓலையை

நீட்டினார் மன்னர்.


"ஓலை...எந்த மன்னனிடமிருந்தாவது ஓலை வந்திருக்கிறதா?" என்றார் கம்பர்.


"நீர் எழுதிய ஓலை..பாரும்

என்ன எழுதியிருக்கிறீர் என்று

படித்துப் பாரும்"

கோபமாகப் பேசினார் மன்னர்.


"தாசி பொன்னிக்குக் கம்பனடிமை

என்று எழுதியிருக்கிறது."


"நீர்தானே எழுதினீர்?"


"நான்தான் எழுதினேன்.

நானேதான் எழுதினேன்.

இதிலென்ன தவறு இருக்கிறது.?"


"தாசி பொன்னிக்குக்  கம்பனடிமை என்று எழுதிக் கொடுத்துவிட்டு என்ன தவறு என்றா

கேட்கிறீர்?"


"இப்போதும் கூறுகிறேன்.

அதில் தவறாக எதுவும் 

இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

நான் தவறுதலாக  ஏதும்

எழுதிவிடவில்லையே."


"அப்படியானால் நீர் தாசிக்கு அடிமை என்கிறீர் இல்லையா?"


"ஆமாம் .நான் தாசிக்கு அடிமை தான்.

இதைச் சொல்வதில் எனக்கு

எந்த வெட்கமும் இல்லை."


"உறுதியாக..."


"உறுதியாக...இறுதியாக.

எத்தனைமுறை கேட்டாலும் 

இதைத்தான் சொல்வேன்.

இதிலிருந்து நான் ஒருபோதும் 

மாறுபடும் போவதில்லை.

."


"தாய் ஸ்ரி என்னும் பொன்மகளாகிய 

அதாவது லட்சுமிக்கு 

கம்பன் அடிமை.

இதுதானே உண்மை

அதைத்தானே எழுதியிருக்கிறேன் 

இதிலென்ன தவறு."

என்றார் சாதாரணமாக.


புலவர்களுக்குப் பேசவா

சொல்லிக் கொடுக்க வேண்டும்?


அதற்கு மேல் மன்னனால் எதுவும்

பேச முடியவில்லை.

ஆனாலும் கம்பன்மீது இருந்த வெறுப்பு

மட்டும் குறையவே இல்லை.

நீர் அரசவையில் இருப்பது என் அரசுக்கே

அவமானம் .அதனால்

நாட்டைவிட்டு வெளியேறும் என்று

கூறிவிட்டார்.


கம்பர் இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.


எனினும் மன்னன் சொல்லிவிட்டான்.

நல்லது  என்று கம்பர் வாயைமூடிவிட்டுச்

சென்று விடவில்லை.


பதிலாக ஒரு பாடலைப்

பாடிவிட்டுச் சென்றார்.

கம்பர் பாடிய பாடல்

 இதோ உங்களுக்காக 




"மன்னனும் நீயோ வளநாடு முன்னதோ


உன்னை அறிந்தோ தமிழை யோதினேன்

                                       -  என்னை


விரைந்தேற்றுக்  கொள்ளாத

வேந்தருண்டோ வுண்டோ


குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு"



நீ மட்டும்தான் இந்த உலகில் மன்னனா?

உன் நாடு மட்டும்தான் வளமான நாடா?

உன்னை அறிந்ததாலா

 நான் தமிழைக் கற்றேன்?

குரங்கை ஏற்றுக்கொள்ளாத 

கிளைகள் இருக்கின்றனவா?

என்னை ஏற்றுக் கொள்ளாத மன்னரும் உண்டோ?


என்று பாட்டாலேயே பதிலடி

கொடுத்துவிட்டு

 அங்கிருந்து

வேறு நாட்டிற்குச் சென்றுவிட்டார் கம்பர்.


ஆரையடா சொன்னாயடா என்று

கேட்டு கம்பரை மடக்கினார் ஔவை.


கம்பரோ

தாசி பொன்னிக்குக் கம்பனடிமை

என்று எழுதியதில் என்ன தவறு

கண்டீர்.

சொற்குற்றமா? இல்லை பொருள்

குற்றமா?

என்று கேட்டதோடல்லாமல்

சொல்லிலும் குற்றமில்லை.

பொருளிலும் குற்றமில்லை.

லட்சுமியாகிய  செல்வத்துக்கு 

நான் அடிமை.இதுதான் நான் சொல்லிய

பாடலின் பொருள்.

இதற்குத்தான் அனைவரும் அடிமை.


அட போய்யா நீயும் உன் நாடும்.

என் தமிழைக் கேட்க

எல்லா நாட்டு வாயில்களும்

திறந்திருக்கின்றன என்று

ஒரே போடாகப் போட்டுவிட்டு 

போயே போய்விட்டார்.


என்னவொரு கர்வம்.

ஞானச்செருக்கு இருக்கத்தானே செய்யும்.


உன்னை அறிந்தோ தமிழை யோதினேன்?

இப்படித் துணிச்சலாகப் பேசிய கம்பர்
தாசி பொன்னிக்குக் கம்பனடிமை 
என்று எழுதியிருக்கிறார் என்பதும் அதற்கு அவர் தமிழில் விளையாடி
சரியான விளக்கம் கொடுத்தது
சிறப்பு. சற்று நேரம்  தமிழருவில் குளிக்க வைத்தது அருமை.

கம்பர் என்றால் சும்மாவா?




Comments