பணி நிறைவுப் பாராட்டு மடல்
பணி நிறைவுப் பாராட்டு மடல்
திருமதி: ஜூலியட் ராஜன்
ஆசிரியை
கே. சி. மாதுங்கா தமிழ்ப்பள்ளி
மும்பை- 19
நாள் :29.06.2024
கத்தும் கடல் கடந்த புகழாறு
கன்னிமாதா கருணைக்கு நிகர் யாரு
பண்டாரகுளம் சந்தானமரியான் ராஜம்மாள் தேனூர
செவியோதி வைத்தார் ஜூலியட் என்ற நற்பேரு !
களிகை ராஜனோடு இணைந்த இந்தத் துணையாறு
இராஜாங்கம் நடத்திப் பெற்றதிரு பொன்னாறு
அகவை இவருக்கு என்றும் பதினாறு - அதுதான்
ஆண்டவன் கட்டளை அதற்கு மறுப்பேது?
ஆர் எஸ் நகரில் சிற்றடி பதித்த சிற்றாறு
ஆரேகாலனி கே.டி காய்க்வாட் எங்கும் தெண்ணீராறு
ஐயாறு ஆண்டுகள் மாதுங்காவில்
நிறைவான வரலாறு
ஐயமில்லை இவர் மாநகராட்சித் தமிழ்ப்பேராறு!
கற்பித்தலில் புதுமை அள்ளிவரும் புத்தாறு
கற்பவர்க்கு இவரொரு தெவிட்டாத நன்னீராறு
கற்றவர் மெச்ச நடந்துவரும் தனிப்பேராறு
கற்றுக்கொள்வதில் பெற்றார் ஈடில்லாத் தனிப்பேரு!
மொழியாக்கப்பணியில் பதித்தார் புது வரலாறு
தமிழ்ப்பாடநூல் பேசுமே நாளும் இவர் பேரு
கவினான உரையோடு நடைபயிலும் செந்தமிழாறு - இவர்
கலையாக நடந்து வரும் வற்றாத ஜீவஆறு
கற்பித்தலுக்கு எல்லைக்கோடு வரைந்தவர் யாரு
கற்றல் கடைசிவரை நடப்பது அறியாதவரு
ஐம்பத்தெட்டில் ஓய்வென்று உரைத்து வைத்தாரு
ஆசானுக்கு அற்றமில்லை என்பதுதானே நெடியவரலாறு!
எஞ்சிய காலங்கள் இன்பத் தேனாறு
விஞ்சிய வளங்கள் குவியட்டும் இல்லம் மகிழுமாறு
மிஞ்சி உழைத்தது போதும் கொஞ்சம்
இளைப்பாறு
கொஞ்சி மகிழ்ந்திருக்க
சொல்கிறோம் வாழ்த்துகள் நூறு!
- செல்வபாய் ஜெயராஜ்
பணி நிறைவுப் பாராட்டு மடல்
Comments
Post a Comment