கண்டாங்கி

கண்டாங்கி...கண்டாங்கி




கண்டாங்கி  கண்டாங்கி

 என்னைக் கட்டி இழுத்த

என்றன் அம்மா

 கண்டாங்கி  
                     
தொட்டில்  கட்டி      

  துயில  வைக்க    

 துணைக்கு வந்த

  கண்டாங்கி.  

தொட்டுப்  பிடித்து 

விளையாடும் போது 

 திரைச்சீலையான

 கண்டாங்கி  

கண்ணீர் சிந்தும்  வேளையில் 

கண்கள் தழுவி 

கனிவு தந்த

 கண்டாங்கி  

தூரல் மழையில்

நனைந்த போது 

 தலையைத்  துடைத்து விட்ட 

  கண்டாங்கி 

 அப்பாவிடம் தூது போக 

பின்னணி பேசும்  

அன்பு  அம்மா     

  கண்டாங்கி             

வெற்றுத்தரையில் 

 படுத்த போது 

பட்டு மெத்தைப்  படுக்கையான

கண்டாங்கி  

விட்டம் தொட்டு  

ஊஞ்சல் கட்டி 

 ஒய்யார ஆட்டம் போட்ட

 கண்டாங்கி

 உண்ணும்போது  உதட்டைத் தாண்டி

எட்டிப் பார்த்த பருக்கையைத் 

 தொட்டுத் துடைத்த  

 கண்டாங்கி 

நைந்து போன  போதும்கூட  

பைய முகத்தைத் தூக்கிப் பார்த்து

 பக்கம் இழுத்த

 கண்டாங்கி

கண்டம் தாண்டி வந்த போதும்

நித்தம்  நித்தம் நினைவில் வந்து

 கதைகள் பேசும் என்றன் அம்மா

 கண்டாங்கி 

Comments

  1. செல்லமாய் கவிதை மிக மிக அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ரொம்ப ரொம்ப ரொம்பவே நல்லா இருக்கு

    ReplyDelete
  3. கிராமபுரத்தில் கண்டாங்கி எவ்வாறெல்லாம் செயல்பட்டது என்பதை மிக அழகாக பதிவிட்டது சூப்பர்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts