அம்மா
அம்மா
வரம் வாங்க வந்தேன் அம்மா
என்னை வாழ்த்த வேண்டும் அம்மா
உயிர்களின் தொடக்கம் அம்மா
உச்சரிப்பின் முதலும் அம்மா
மொழிப்பாடம் கற்றுத் தந்த
முதல் பேராசிரியை அம்மா
எல்லைக்கோடு இல்லா
அன்புக்காரி என் அம்மா
காலக்கோடு வரைந்து வைத்த
கோலப் பேரழகி அம்மா
விலை பேச முடியா
கலைதான் என் அம்மா
அகவை ஏறிடினும்
மகவாய்த் தாலாட்டுவாள் அம்மா
தொல்லை கொடுத்திட்டேன் சும்மா
தள்ளி விட்டிடாள் அம்மா
கரிசனம் மிகக் கொண்ட
ஜீவாத்மா!
காண்பதில்லை இவர் போலொரு
பரமாத்மா !
கணப்பொழுதும் எனை மறவா
நல்லாத்மா!
கண்கண்ட தெய்வம்
என் அம்மா அம்மா அம்மா!
Comments
Post a Comment