பந்தம்
பந்தம்
பள்ளியில் விண்ணப்பப் படிவம் வாங்க வரிசையில் நின்றார் நீலமேகம்.
வரிசை ஒரு கிலோமீட்டர் வரை நீண்டு கிடந்தது.
கடைசியில் போய் நின்று கொண்டார்.நீலவேணியையும் கையோடு கூட்டி வந்திருந்தார்.
நேரம் ஆக ஆக வெயில் அதிமாகிக் கொண்டிருந்தது.
ஆனால் வரிசை ஆறு அடி கூட நகர்ந்த பாடில்லை.
இன்னும் விண்ணப்பப் படிவம் கொடுக்கவில்லையோ மனதிற்குள் ஒரு சந்தேகம்.
ஆறேழு முறை முன்னால் எட்டிப் எட்டிப் பார்த்தார்.
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை வரிசைதான் தெரிந்ததே தவிர யாரும் கையில் விண்ணப்பப் படிவம்
வாங்கிக் கொண்டு செல்வது போல் தெரியவில்லை. இப்படியே வரிசை ஆமை வேகத்தில் நகர்ந்தால்
எப்போது விண்ணப்பம் வாங்குவது?
இப்போது தான் அவருக்குப் புரிந்தது .
"நீலவேணியை வீட்டிலேயே விட்டுவிட்டு
வந்திருக்கலாமோ
வீட்டில் தனியாகத் தானே இருக்க வேண்டும்.
இரண்டு பேரும் சேர்ந்தே போய் வரலாமே" என்று நினைத்தார்.
இவ்வளவு கூட்டம் இருக்கும் என்று நினைக்கவில்லை.
மெதுவாக அவர் நீலவேணியின் தலையைத் தடவிக் கொடுத்தார்.
கையைப்பற்றிக் கொண்ட நீலவேணி "அப்பா" என்றாள்.
" என்ன ..."என்பது போல அவள் முகத்தைப்
பார்த்தார் நீலமேகம்.
"அப்பா எப்பப்பா ? போவோம்...
எவ்வளவு நேரமாகுது....
வீட்டுக்குப் போகணும் வாங்க..."
கையைப் பிடித்து இழுத்தாள்.
"இப்ப போகலாம்.....கொஞ்சம் பொறு...
ஸ்கூல் போகணும் இல்லையா?
ஸ்கூல் போகணும் என்றால் விண்ணப்பம்
வாங்கி உன் பெயரை எல்லாம் எழுதி பள்ளியில் கொடுத்தால்தான் சேர்ப்பாங்க."
ஏதோ விவரமாக பேசிவிட்டது போல நீலவேணியின் முகத்தைப் பார்த்தார்.
ஆனால் நீலவேணி இது எதையுமே காதில் வாங்கிக்
கொண்டதாக தெரியவில்லை.
" ம்... ஆனால் கால் வலிக்குதுப்பா. நாளைக்கு ஸ்கூல் வரலாம்.வாங்க ..."கையை விடாமல் தொணதொணக்க ஆரம்பித்தாள் நீலவேணி.
" என்ன வேணும்? சாக்லேட் வாங்கி தரட்டுமா? "
வேண்டாம் ... வேண்டாம்.
"நீ போப்பா. நான் இனி உன் கூட எங்கேயும் வர மாட்டேன்.".. "கோபம் காட்டினாள் நீலவேணி.
முகத்தைத் தடவிக் கொடுத்தார்... நீலமேகம்.
" அப்பா..."
என்ன? கொஞ்சம்பொறு.போகலாம்...
.போக்குக் காட்டிப் பார்த்தார் .
" எனக்குத் இப்போ தண்ணீர் வேணும் "பிடிவாதம் பிடித்தாள் நீலவேணி.
இவ்வளவு நேரம் ஆகும் என்று நீலமேகம் நினைக்கவில்லை.
நினைத்திருந்தால் கையோடு ஒரு தண்ணீர் பாட்டிலாவது எடுத்து வந்திருப்பார்.
இப்போ தண்ணீருக்கு எங்கே போவது? வரிசையை விட்டுவிட்டு
தண்ணீர் வாங்க போகமுடியாதே.
அங்கே இங்கே பார்த்த நீலமேகத்தின் கண் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண் வைத்திருந்த தண்ணீர் பாட்டில்மீது போய் நின்றது.
புரிந்து கொண்ட அப்பெண் தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினாள்.
" வேண்டாங்க" ஒரு மரியாதைக்காக அப்படி சொல்லி வைத்தார் நீலமேகம்.
"பரவாயில்லை. சின்ன பொண்ணு கேட்குதுல்ல. பாப்பா இந்தா குடி "என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினாள் அந்த பெண்.
வாங்க தயங்கியபடி அப்பா முகத்தைப் பார்த்தாள் நீலவேணி.
"வாங்கிக்கோ ... வாங்கிக்கோ" என்றார்.
பிடிவாதமாக வாங்க மறுத்தாள் நீலவேணி.
தண்ணீர் பாட்டிலை வாங்கி நீலவேணி யிடம் தந்தார் நீலமேகம்.
இப்போது தண்ணீர் பாட்டிலை வாங்கி இரண்டு மடக்கு குடித்து விட்டு திரும்பவும் அப்பாவிடமே நீட்டினாள் நீலவேணி.
" நன்றி! "என்று கூறி பாட்டிலைத் திரும்ப அந்த பெண் கையில் தந்தார் நீலமேகம்.
ஐந்து நிமிடம் கூட பொறுத்திருக்க மாட்டாள். அதற்குள் மறுபடியும் அப்பா என்று அழைத்தபடி அப்பா முகத்தைப் பார்த்தாள்.
அந்த பார்வையில் "ப்ளீஸ் ..அப்பா "என்ற ஒரு கெஞ்சல் தெரிந்தது.
" வயிறு பசிக்குதா ? "
கொண்டு வந்திருந்த பிஸ்கெட்டை எடுத்து நீட்டினார் நீலமேகம்.
"வேண்டாம் ."கையில் இருந்த பிஸ்கெட்டைத் தள்ளி விட்டாள்.
"வேறு என்ன வேண்டும்? கொஞ்சம் பொறு. இப்போ போயிடலாம் "சமாதானப்படுத்திப் பார்த்தார் நீலமேகம்.
நீலமேகத்தின் சமாதானத்தை அவள் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
" எவ்வளவு நேரம் இப்படியே நிற்பது? கால் வலிக்குது . வாங்க அந்த மரத்திற்கு கீழ் போய் உட்காரலாம். "கையைப்பிடித்து இழுத்தாள் நீலவேணி.
" வேண்டாம் .கொஞ்ச நேரம் சும்மா இரு".கையை இருக்கிப் பிடித்தபடி பதிலளித்தார்.
கவனம் முழுவதும் எப்படியாவது விண்ணப்பம் வாங்கிவிட வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது.
ஆனால் மகள் நெழிவதைப் பார்த்து அவரால் சும்மா இருக்க முடியவில்லை.
" நீ போய் மரத்துக்குக் கீழே போய் உட்கார்ந்துக்கோ. அப்பா சீக்கிரம் வந்து உன்னைக் கூட்டிப்போறேன்.சரியா?"
" மாட்டேன்....நான் மாட்டேன்."அப்பாவின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள் நீலவேணி.
அந்தப் பிடியில் "உங்களை விட்டுவிட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் "என்ற உறுதி இருந்தது.
அந்த பிடிவாதம் நீலமேகத்தை என்னவோ செய்ய ஆரம்பித்தது.
நேற்றுவரை ஏதாவது ஒரு ஆசிரமத்தில் கொண்டு விட்டுவிடலாமா என்றுதான் நினைத்துக் கொண்டருந்தார்.
தன் பிள்ளைகள் தன்னை தனியாக
விட்டுவிட்டுப் போன பின்னர் யாரிடமும் நெருக்கம் காட்டாமல் தனியாக இருந்தார்.
தனிமை அவரை நிம்மதி இழக்கச்செய்தது.
ஊரின் ஒதுக்குப்புறமாக வீடு இருந்ததால்
யாரிடமும் அதிக நெருக்கம் வைக்க வில்லை.
அப்போதுதான் ஒருநாள் ஊர் பஞ்சாயத்து ஒன்று நடந்தது.
ஒரு விபத்தில் தாய் தந்தையரை இழந்த இந்த சிறுமியை
யார் தத்து எடுத்து வளர்ப்பது என்ற விவகாரம்
தான் ஊர் பஞ்சாயத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
பஞ்சாயத்து நிகழ்வுகளை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க சென்றார் நீலமேகம்.
ஆனால் உறவினர்கள் யாரும் அந்த சிறுமியை ஏற்றுக் கொள்ள தயாராகவில்லை.
கண்ணீரோடு ஒவ்வொருவர் முகத்தையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்த சிறுமியைப்
பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
" சே...சே என்ன உறவுகள்? "நொந்து கொண்டார்
நீலமேகம்.
உறவுகள் இல்லாத வலி எவ்வளவு கொடுமையானது என்பது அவருக்குத் தெரியும்.
அந்த கொடுமை இந்த சிறிய வயதிலேயே
இச்சிறுமிக்கு வந்திருக்கக் கூடாது.
நினைக்கவே வேதனையாக இருந்தது
நீலமேகமும் அந்த சிறுமிக்கு தூரத்து உறவுக்காரர் தான்.
அப்போதுதான் துணிந்து இந்த முடிவு எடுத்தார்.
யாரும் கூட்டிட்டுப் போக வேண்டாம்.
எல்லோருக்கும் சம்மதம் இருந்தால்
நானே இந்த சிறுமியைக் கூட்டிப் போறேன்
என்று பஞ்சாயத்தினரிடம் கூறினார் நீலமேகம்.
இதை சற்றும் எதிர்பாராத உறவினர்கள்
எப்படி என்பது போல நீலமேகத்தின் முகத்தைப் பார்த்தனர் ஆமாம் தன்னந்தனியாக இவரால் எப்படி
பார்த்துக் கொள்ள முடியும்?
ஆளாளுக்கு அந்த சிறுமியை ஏலம்
போடுவதை அவர் மனம் ஏற்கவில்லை.
ஏதாவது ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விட்டால்
அதுபாட்டுக்கு படிச்சி ஒரு நல்ல
நிலைமைக்கு வந்துடும்.
இப்படி ஒரு இந்த பிள்ளைக்கு ஒருநல்ல வழியை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற
நினைப்பில்தான் இந்த முடிவு எடுத்தார்.
ஊராரும் உறவினர்களும் சம்மதம் தெரிவிக்கவே நீலவேணியைக் கையோடு வீட்டிற்குக்
கூட்டி வந்தார்.
நாள் தோறும் குட்டிக்கதைகள் கூறுவார்.
இடையிடையே ஏன்? எதற்கு? எப்படி? என்று நீலவேணி கேட்கும் கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்லுவார்.
சாயங்காலம் ஆனால் இருவரும் கையைப்பிடித்து ஊரை சுற்றி நடைபயிற்சி செய்வர்.
இப்போது எல்லாம் தான் தனித்து
விடப்பட்டு விட்டோமே என்ற கவலை ஏற்படுவதே இல்லை.
நீலவேணியோடு ஏதோ ஒரு பிரிக்க முடியாத பந்தம் இருப்பதை உணர்ந்தார்.
இனி நீலவேணியைப் பிரிந்து இருக்க முடியாது
என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் நீலமேகம்.
அதனால்தான் ஒரு நல்ல பள்ளியில்
சேர்த்துவிட வேண்டும் என்று
இன்று விண்ணப்பம் வாங்க வந்தார்.
இனி ஒரு போதும் நீலவேணியை யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்ற உறுதி மனதில் இருந்தது.
எதற்காகவும் யாருக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்.
கையை இருக்கமாக பற்றிக்கொண்டார்.
அந்த பிடியில் உனக்கு நான் இருக்கிறேன்.எனக்கு நீ இருக்கிறாய் என்ற பிரிக்க முடியாத பந்தம் இருந்தது.
ஒரு நெருக்க
லாம்.
Comments
Post a Comment