பண்னென்னாம் பாடற் இயைபின்றேல்....

பண்னென்னாம் பாடற் கியைபின்றேல்....


"பண்னென்னாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்"


பண் - இசை
என்னாம்- என்ன பயன்
பாடற்கு -பாடலோடு
இயைபு- பொருத்தம்
இன்றேல்- இல்லையாயின்
கண்- விழி
என்னாம்-என்ன பயன்
கண்ணோட்டம் - இரக்கம்
இல்லாத- இல்லாத 
கண்- இடத்து.


பாடலோடு இசை பொருந்தவில்லை 
என்றால்
இசையால் என்ன பயன் ?
அதுபோல கருணை இல்லையென்றால்
கண்களால் என்ன பயன்?


விளக்கம் :

பாடல் என்றால் அது இசையோடு
ஒத்துப் போவதாக இருக்க வேண்டும்.
இசையோடு ஒத்துப் போகாத பாடல்
கேட்பதற்கு இனிமை தராது.
.தாளம் தப்பாமல் இசையோடு
இருப்பதுதான் பாட்டு.

அதுபோல கண் என்றால்
அது வெறுமனே பார்ப்பதற்கு
மட்டும் பயன்படுவதாக இருத்தல்
கூடாது.அதில் உணர்வு இருக்க வேண்டும்.
அதாவது கருணை, இரக்கம்
இருக்க வேண்டும்.துன்பப்படும்
ஒருவரைப் பார்த்துவிட்டு பாராததுபோல்
கடந்து போவதற்குக் கண்கள்
எதற்கு?
உணர்ச்சியற்று
கடந்து போவதற்காக
கொடுக்கப்பட்டவை அல்ல கண்கள்.
கண்கள் என்றால் அதில் உணர்வுகள்
இருக்க வேண்டும்.
அதுவும் கருணை செய்யும்
கண்களாக இருக்க வேண்டும்.

கருணையும் கனிவும்
 இருந்தால்தான் அது கண்.
அது இல்லை என்றால் அவை வெறும்
உணர்ச்சியற்ற ஓர் உறுப்பு 
என்கிறார் வள்ளுவர்.


English couplet:

Where not accordant with the song, what use of sounding chords?
What gain of eyes that no benignant light affords?


Explanation:

Of what avail is a song if it be inconsistent
with harmony?
What is the use of eyes which
possess no kindliness.


Transliteration :

"Panennaam paatarku iyapindrel kanennaam
Kannottam illaadha Kan"






Comments

Popular Posts