பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து



தேனுலா தமிழுலா தேடலா (ல்)
பால்நிலா வானுலா  வந்து
வாழ்த்துச் செய்தி வாசித்தலா!
கவியுலா கொண்டு தென்றல்
காதோடு கவி பாடலா!
கைபேசி கிண்கணியென 
கிண்ணரம் இசைத்து
தத்தை மொழிபேசி வாழ்த்தலா(ல்)
உள்ளம் மகிழ்ச்சி கடலிலா!
இறையருள் இல்லம் நிறைத்ததா(ல்)
நலமும் வளமும் 
நல்லாட்சி நடத்தலா!
இன்பம் நிரந்தர 
குடியுரிமை கொண்டலா(ல்)
நெடிய புகழ் காண்டலா!
வானும் நிலனும் போல
வாழ்க என்னும்
எழுத்துலா கட்செவி அஞ்சலேறி
வந்தது இன்பச் சிற்றுலா!
வாழ்க....பல்லாண்டு
பல்லாண்டு...பல்லாயிரம் ஆண்டு
இன்றுபோல் என்றும் உவந்து!

              - செல்வபாய் ஜெயராஜ்

Comments