உலக பிராத்தனை தினம்


உலக பிராத்தனை தினம்


மார்ச் மாதம் முதலாம் வெள்ளி உலக பிராத்தனை தினம்.

இது உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப்

பெண்களால் நடத்தப்படும் ஒரு இயக்கமாக செயல்படுகிறது..


பிராத்தனை செய்வதன் நோக்கம் என்ன?

பிரார்த்தனையால் என்ன கிடைக்கும்

என்ற கேள்விகள் உண்டு.

பிராத்தனை மனித மனதை இலகுவாக்குகிறது.  இன்றையச் சூழலில்

அனைவரும் ஏதோ ஒரு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான்  வாழ்ந்து

கொண்டிருக்கிறோம்.

வீட்டில் ...பணியிடங்களில்... அக்கம்பக்கத்தில்.... சமுதாயத்தில் என்று நாலாப்பக்கங்களிலிருந்தும் சிக்கல்கள் வந்து சூழ்ந்து கொள்ளும்போது அதிலிருந்து விடுபடுவது எப்படி?

யாராவது ஆறுதலாக நாலு வார்த்தை

சொல்லிவிட மாட்டார்களா என்று மனம்

ஆலாய்ப் பறக்கும்.....ஆறுதலைத் தேடும்.

அப்படி ஆறுதலுக்காக இறைவனிடம்

போய் நிற்கிறோம். 

அல்லது பிரார்த்தனைக் குழுக்களிடம்

சென்று பிராத்தனை செய்கிறோம்.

தனிமையில் பிராத்தனை செய்வதைவிட

இரண்டுபேர் மூன்றுபேர் சேர்ந்து குழுவாகச் பிராத்தனை செய்தால்

நாம் விரும்பியது நடக்கும் என்ற

நம்பிக்கை ஏற்படும் 

மன அமைதி:

நமது மன அமைதிக்கான வடிகாலாக அமைந்திருப்பதுதான்  பிரார்த்தனைக் மையங்கள்..பிராத்தனை மையங்களை நாடி ஓடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர்.

அதனால்தான் பிரார்த்தனைக் கூடங்களில்

நடைபெறும் கூடுகைகளின்போது பெண்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

அதனால்தானோ என்னவோ உலக பிராத்தனை தினம் உருவானதற்குப் பின்னணியிலும் பெண்கள் அமைப்புகள் தான் இருந்திருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.

அமைப்பு உருவாக்கம்:

இந்தப் பிரார்த்தனைத் தினம்

உருவாகுவதற்கான நோக்கம் என்ன?

அமைதி மற்றும் நீதிக்கான பங்களிப்பில்
பெண்களையும் ஈடுபடுத்திட வேண்டும்
என்ற நல்ல நோக்கத்திற்காக இந்த
அமைப்பு தொடங்கப்பட்டது.

கூடி பிராத்தனை செய்வது

குழுக்களை ஒருங்கிணைப்பது

பிராத்தனைகள் மூலம் ஒருவரை

ஒருவர் தாங்குவது பொருளாதாரத்தில்

பின்தங்கியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவது

இப்படி ஓர் உயர்ந்த நோக்கங்களைக்

கொண்டதாகவே பிராத்தனை தினம்

உருவாக்கப்பட்டது.

 குறிக்கோள்:

ஒதுங்கி நிற்கும் பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு முடக்கப்பட்டு

வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பெண்களுக்களை முன்னேற்ற வேண்டும்.

அவர்களுக்கு உளவியல் ரீதியான

ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் .அவர்களையும் குழுக்களோடு இணைத்துத் திடன் கொண்டவர்களாக மாற்ற வேண்டும்.

அவர்களையும் சபை நிகழ்வுகளில்

பங்கெடுக்க வைக்க வேண்டும் இவை பிராத்தனை குழுக்களின் முக்கிய

நோக்கமாக இருந்தது.

பணி இடங்களில் பிரார்த்தனைக் 

பணியிட குழுக்கள்:

 பணி நிமித்தமாக வெளியிடங்களில் இருக்கும் பெண்களை ஒருங்கிணைப்பது ,பணியிடங்களில் பிரார்த்தனைக் குழுக்கள் அமைத்து உதவித் தேவைப்படுவோர்க்கு உதவுவது

இவைதான் பிராத்தனை அமைப்பு ஒரு இயக்கமாக செயல்பட தூண்டு கோலாக அமைந்தது. அதனால்தான்

இது அமெரிக்காவில் உள்ள பெண்களால்

வீட்டிலேயே குழுவாக சேர்ந்து பிராத்தனை செய்யத் தொடங்கப்பட்டாலும் காலப் போக்கில்

உலகெங்கிலும் இந்தப் பிராத்தனை குழுக்கள் பரந்து விரிய காரணமாக அமைந்தது.

செயல்பாடுகள் :

அதனை இன்று கொண்டாட்டமாகவே முன்னெடுத்துச் செல்கின்றனர்.

அமெரிக்கப் பெண்கள் முதன்முதலில்

1926 இல் உலக பிராத்தனை இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

அதற்கு அடுத்த ஆண்டு முதல் உலகெங்கும் பிராத்தனைக் குழுக்கள் மூலமாக கொண்டாட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.

பைபிள் கதைகள் சொல்லுதல் ,பரிசுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளல்,

பிராத்தனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல்  என்று பெண்கள் மத்தியில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் தீவிரமாக

நடைபெற்றன. 

கொண்டாட்டத்தால் கிடைக்கும் நன்மைகள்:

1.அன்பில் ஒருவரை ஒருவர் தாங்குதல் நிகழ்கிறது

2.இறை நம்பிக்கை அதிகமாகிறது.

3.சேவை மனப்பான்மை வளர்கிறது.

4.ஒரு நட்பு வட்டத்தை உருவாக்குகிறது.

5.. தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

6.. தாழ்வு மனப்பான்மை நீங்குகிறது.

 கூடுகையின் பலன் பற்றி பைபிள்

கூறுவதென்ன?

"எங்கே இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே

எங்கே கூடியிருக்கிறார்களோ

அங்கே அவர்கள் நடுவில் வருவேன்"

என்ற வேத வசனம் நிறைவேறும் என்ற

நம்பிக்கை வரிகளின் அடிப்படையில்  

பிராத்தனைகள் குழுக்கள் இயங்குகின்றன.


இலச்சினை:(லோகோ:)

இந்தச் செயல்பாடுகள் அங்கங்கே 

நடைபெற்று ஒரு பெரிய இயக்கமாகவே முன்னெடுத்துச்

செல்லப்பட்டது. இப்போது அதற்கான அடையாளம் தேவையாயிற்று.

அதனால் இந்த இயக்கத்திற்கான லோகோ உருவாக்கும் பணியை அயர்லாந்து பிராத்தனைக் குழு கையிலெடுத்து.

அதன்படி லோகோ உருவாக்கப்பட்டது.

திசைகாட்டி முலள் ஒரு புள்ளியிலிருந்து

நான்கு திசைகளையும் நோக்கிப் புறப்படும் அம்பு போன்று வடிவமைக்கப்பட்டது. சுற்றி ஒரு வட்டம் உலகத்தையும் அதன் பன்முகத் தன்மையையும் உள்ளடக்கியது போன்று

ஒரு லோகோ உருவாக்கப்பட்டது.

இவ்வாறு பொருள் பொதிந்த அமைப்பின் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வவகையில் அமைப்பிற்கான லோகோ உருவாக்கப்பட்டது.

இந்த லோகோ சர்வதேச பிராத்தனைத் தின லோகோவாக 1982 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று முதல்

முறைப்படி செயல்படும் ஒரு இயக்கமாக ஒரு அங்கீகாரம் கிடைத்தது.

உலக பிராத்தனை தினம்:

தற்போது உலக பிராத்தனை தினம்

என்று ஒரு நாளும் குறிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் வாரத்தில் வரும்

வெள்ளிக்கிழமை உலக பிராத்தனை தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அன்பில் ஒருவரை ஒருவர் தாங்குங்கள்:

அதற்கென ஆண்டுதோறும் சிறப்பு முன்மொழிவு ஒன்று அறிமுகப் படுத்தப்படும். அதன் அடிப்படையிலேயே

அந்த ஆண்டு பிராத்தனை தின நிகழ்வுகள்

வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

 2024 ஆம் ஆண்டிற்கான

முன்மொழிவு 

"நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.....

அன்பில் ஒருவரை ஒருவர் தாங்குங்கள்" எபேசியர் 4 : 1-3

என்பதாகும். பாலஸ்தீன போரில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக

இந்த ஆண்டு இந்த முன்மொழிவு வைக்கப்பட்டது. அமைதி ஏற்படவும் பாதிக்கப்பட்டவர்களின் ஆறுதலுக்காகவும் நடைபெறும் பிராத்தனை தினமாக இந்த ஆண்டு செயல்பாடுகள் இருந்தன.

பிராத்தனை தின நோக்கங்கள் 

நிறைவேறட்டும்.அமைதி நலவட்டும்.

தனிமையில் வாடும் பெண்களுக்கு

ஆறுதலாகவும்  தன்னம்பிக்கையூட்டுவதாகவும் பொருளாதார உதவி தேவை உள்ளவர்களைக் கண்டறிந்து உதவுவதாகவும்  தொடர்ந்து பிராத்தனை தின செயல்பாடுகள் இருக்க வாழ்த்துகள்.







Comments

Popular Posts