சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்.

நாம் எங்கே நிற்க வேண்டும் என்று நமக்கான இடத்தை 

நாம்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


யாருக்காகவும் உன்னை மாற்றிக்

கொள்ளாதே.

மாற்றிக் கொள்ள நினைத்தால்

ஏமாற்றம்தான் இறுதிவரை நிகழும்.


நீ நீயாக இரு.

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே.


தன்மானம் பாதிக்கப்படும் 

இடத்திலிருந்துதான் 

எதிர்ப்பு கிளம்பும்.


மரியாதை இல்லாத இடத்தில்

மௌனமாய் இருந்துவிடு.


உண்மை உன்னை பலவீனப்படுத்தும்

அதற்காக உண்மையைத் தொலைத்துவிடாதே


நேற்றைய எதிரி

நாளைய நண்பன்

என்று நம்பிவிடுவது

முட்டாள்தனம்.


ஒருமுறை எதிரி 

எப்போதும் எதிரி.


கலகக்காரனிடமிருந்து

தள்ளி நில்.


பொய்யும் புரட்டும்

பொய்யனின் மினுக்கு.


தேடாத உறவு

தோண்டாத துறவு


பணம் பேசும்.

மௌனம் பேச வைக்கும்.


அவமானம் தரும் ஊக்கம் போல்

வேறொரு ஊக்கம் இல்லை.


பணம் இல்லாதபோது 

உறவுகளிடம் இருந்து 

விலகியிரு .


இல்லாமையை யாரிடமும்

பகிர்ந்து கொள்ளாதே.


பணமில்லாதபோது 

உறவினர் வீட்டிற்குச்

செல்வதும் பாழும் கிணற்றில்

விழுவதும் ஒன்று.



வறுமையை நண்பனிடம்

சொல்லாதே

அதுவே அவனை உன்னைவிட்டு

விலக்கிவிடும்.


ஆளில்லாத போது

அரவமில்லாமல் பேசு.


வாழ்க்கை ஒரு பந்தயம்

ஜெயிக்கிறவன் கொண்டாடப்படுவான்..

தோற்றவன் கண்டுகொள்ளப் 

படுவதில்லை.



விழுந்தால் பாடம்

எழுந்தால் வெற்றி.


பாடம் கற்றவர்களால்

மட்டுமே வெற்றி பெற

முடியும்.



தோல்வியைத் தழுவாத  வெற்றி

நிரந்தரமாக இருக்க முடியாது.



பாரம் என்று நினைத்தால்

சிறகுகூட விரியாது.

தூரம் என்று நினைத்தால்

மரக்கிளை கூட வானமாகத்தான்

தெரியும்.


ஒருமுறை மட்டுமே 

வரும் அதிஷ்டம்.


மறக்கக்கூடாத இருவர்.

உன்னவெற்றிக்காக அனைத்தையும்

இழந்த அப்பா

உன் வலியில் உன்னோடு 

நின்ற அம்மா.



கோபம் அளவாக இருந்தால் சுவை.

அன்பு அளவாக இருந்தால் 

 அருஞ்சுவை


நின்ற இடத்தில் நிமிர்ந்து 

பார்ப்பது அழகு.

நிமிர்ந்து பார்க்க வைப்பது

பேரழகு


வாழ்க்கை ஒரு வெற்றுக்  காகிதம்.

அதனை  அழகாக எழுதுவதும் அப்படியே வைத்திருப்பதும்  உன் கையில்தான்

இருக்கிறது.


போய்க் கொண்டிருக்கும்போது

திரும்பிப் பார்க்காதே.

முன் நோக்கிய பயணத்தில்

பின்நோக்கிய பார்வை 

தேவையில்லாதது.


இருக்கிறதை வைத்து இல்லாததை

உருவாக்கு.

எல்லாம் உனதாகும்.


நேர்மை தாமதமானாலும்

நிச்சயம் உன் நேர்மைக்குத்

தக்க பலனைத் தந்தே தீரும்.


 படிக்க மறுப்பவனுக்கும்

கடைசிவரை காலம்

பாடம் கற்பித்துக் கொண்டுதான் 

இருக்கும்.



காலம் சொல்லித் தராததை யாரும்

சொல்லித் தர முடியாது.


உப்போ நட்போ அளவோடு

இருந்தால்தான் மதிப்பு.

அளவுக்கு அதிகமானால் 

ஆபத்தில் முடியும்.



மொழிகளுள் யாரையும்

காயப்படுத்தாத மொழி 

மௌனம்.



உன்னைச் செதுக்கும் உளி உன் கையில் இருக்கட்டும். எதற்காகவும் அதை பிறர் கையில் கொடுத்து விடாதே.





Comments

Popular Posts