உலக தோல்வி நாள்
உலக தோல்வி நாள்
இன்று அக்டோபர் பதிமூன்று.
உலக தோல்வி நாள்.
வெற்றியைக் கொண்டாடுவோம்.
அதற்கான ஒரு நாளைக் குறிப்பிட்டு ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்வோம்.
தோல்வியைக் கொண்டாடும் மனிதர்களும் உண்டா என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
தோல்வியைக் கொண்டாடும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பின்லாந்து நாட்டின் ஆல்டோ பல்கலைக்கழக மாணவர் குழு கூடி முதன்முதலாக 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் தோல்வி நாளைக கொண்டாடினராம்.
அவ்வாறு அவர்கள் கொண்டாடியதற்குப் பின்னால் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் நியாயமான காரணங்கள் இருந்தன.
தோல்வியடைந்தவர்கள் மனதில் இருக்கும் தோல்வி பயத்தை நீக்கி அங்கிருந்து அவர்களை மீள வைத்து புதிய எழுச்சியோடு அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வைக்கும் நோக்கத்திற்காகவே தோல்வி நாள் கொண்டாட முடிவு எடுத்தனராம்.
நல்ல நோக்கம் .
கீழ்க்கொடுக்கப்பட்ட மூன்று கருத்தைக்களை முன் வைத்துதான் இந்தத் தோல்விநாள் கொண்டாடப்படுகிறது.
தோல்வி பயத்தை நீக்குதல்:
முதலாவது தோல்வியடைந்தவர்கள் மனதிலிருந்து அந்தத் தோல்வி பயத்தை நீக்க வேண்டும். மறுபடியும் வீழ்ந்து விடுவோமோ என்ற பயம் எழுந்து நடக்கவிடாமலேயே செய்துவிடும். பயம்தான் ஒருவனுடைய வளர்ச்சிக்கு முதல் எதிரி. அது முற்றிலுமாக களையப்பட வேண்டும்.
கற்ற பாடம் என்ன?
இரண்டாவதாக இந்தத் தோல்வியிலிருந்து நாம் கற்ற பாடம் என்ன என்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் நாளாக இந்த நாள் இருக்க வேண்டும் என்பதுவும் அவர்கள் நோக்கமாக இருந்தது. நாம் கற்ற அனுபவங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளும்போது அனைவர்க்கும் புதிய புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன. எந்தந்த இடங்களில் எல்லாம் வீழ்கிறோம் என்று புரிந்துகொள்ள முடிகிறது இந்த வழியாகச் சென்றால் பயணம் எளிதாக இருக்காது. மாற்று வழியில் பயணம் பட்டால் எளிதாக நமது இலங்கைச் சென்றடைய முடியுமா என்று மாற்றி யோசிக்க வைக்கிறது..
தோல்வியிலிருந்து மீள வைத்தல்:
மூன்றாவதாக தோல்வியடைந்தவர்களை அதிலிருந்து மீள வைத்து புதிய முயற்சிகளை மேற்கொள்ள ஊக்கப்படைத்த வேண்டும். அனுபவங்களைக் கேட்கும்போது மனதுக்கு சற்று ஆறுதல் கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகள் மனதை எளிதாக்கும். அடுத்த கட்டமாக என்ன மேற்கொண்டால் வெற்றிபெறலாம் என்பதற்கான வழிகாட்டுதல் கிடைக்கும்.
கைகாட்டி சரியான பாதைக்குத் திருப்பிட ஒருவர் கிடைக்கும்போது புதிய முயற்சிகளை மேற்கொள்ள ஆர்வம் ஏற்படும். அதற்கான களமாக இந்தத் தோல்விநாள் இருக்க வேண்டும்.
இப்படி இந்த மூன்று காரணங்களுக்காகத்தான் தோல்வி நாள் கொண்டாடப்படுகிறதாம்.
நாம் சாதாரணமாக நினைத்த இந்தத் தோல்விநாள் அசாத்தியத்த்தை நோக்கி நகர்த்தும் நல்ல நாளாக இருந்திருப்பதைக்
கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா?
நோக்கம் நல்லதாக இருந்தால் தோல்வியைக் கொண்டாடுவதில் தப்பில்லையே!
வாழ்த்துகள் 👌
கருத்துகள்
கருத்துரையிடுக