ஆகாறு அளவிட்டி தாயினுங்....

  ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை...

"ஆகாறு அளவிட்டி தாயினுங்  கேடில்லை
போகாறு அகலாக் கடை "

                   குறள்   :  478

ஆகாறு - பொருள் வருகின்ற வழி
அளவு - அளவில்
இட்டிது _ சிறியது
ஆயினும் - இருந்தாலும்
கேடு - துன்பம்
இல்லை- வருவதில்லை
போகாறு - பொருள் போகும் வழி
அகலாக் கடை - பெரியதாக இல்லாதிருந்தால்


பொருள் வரும் வழி சிறிதாக இருந்தாலும் 
போகும் வழி விரிவுபடாமல் இருந்தால்
அதனால் எந்தக் கேடும் வரப்போவதில்லை.

விளக்கம் : 

வரவுக்கு அதிகமாக செலவு செய்யக்
கூடாது.
ஈட்டும் பொருளைவிட செலவு அதிகமாக
இருக்கக் கூடாது.
அப்படி இருந்துவிட்டால்...
வரவு எட்டணா
செலவு பத்தணா
....கடைசியில் துண்டணா...துண்டணா
என்ற கதையில் வந்து நிற்கும்.

இதைத்தான் ஔவையும் 
ஆனமுதலில்
அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு
.........போக வேண்டியிருக்கும்
என்றார்.
ஆற்றில் போட்டாலும் அளந்து
போட வேண்டும்.

வருமானம் குறைவாக இருந்தாலும்
பரவாயில்லை.
செலவு பெருகிவிடக் கூடாது.

வருமானத்திற்குள் செலவு இருக்கும்படி
திட்டமிட்டு செயல் பட்டால் ஒருநாளும்
இல்லை என்ற நிலை வராது.
திட்டமிட்டு வாழும் வாழ்க்கை அறிவுறுத்தப்
பட்டுள்ளது.
இது அரசருக்கு மட்டுமல்ல அனைவரும்
வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய
ஒன்று.

ஆடம்பரமாக வாழ நினைத்து வருவாய்க்கு
அதிகமாக செலவு செய்து மாத
இறுதியில் திண்டாடும் குடும்பங்களுக்கும்
அறிவுரையாகக் கூறப்பட்டுள்ள குறள்.

வரவுக்குள் செலவு செய்ய பழகிக்
கொள்ளுங்கள். வாழ்க்கையில்
பணத்தட்டுப்பாடு என்ற ஒன்று வரவே வராது.
எதற்கும் திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.
இருக்கிற வருமானத்திற்குள் செலவு
செய்யுங்கள் என்கிறார் வள்ளுவர்.

English couplet :

"Incoming may be scant; but yet , no failure there,
If in expenditure you rightly learn to spare"


Explanation : 

Even though the income ( of a king ) be small,
it will not cause his ( ruin), if his if his outgoings
 be not larger than his income.

Transliteration : 

"Aakaaru Alavitti Thaayinung ketillai 
Pokaaru Akalaakk katai "

Comments

Popular Posts