செல்லாமை உண்டேல் எனக்குஉரை....

செல்லாமை உண்டேல் எனக்குஉரை...


"செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை "

                              குறள் :           1151


செல்லாமை _  செல்லாதிருத்தல்
உண்டேல் -      இருப்பதானால்
எனக்கு -          என்னிடத்தில்
உரை   -           சொல்
மற்று   -          அவ்வாறன்றி
நின்   -              உனது
வல்          - விரைவாக
வரவு    -   வருகையை
வாழ்வார்க்கு -  உயிர் வாழ்பவர்க்கு
உரை -         சொல்

பிரிந்து செல்லாதிருப்பாயானால் என்னிடம் சொல்.
பிரிந்து சென்று விரைந்து வருவேன் என்று
கூறுவாயானால் அதுவரை உயிர்வாழ 
வல்லவருக்குச் சொல்.

விளக்கம் : 
புதிதாக இல்லறத்தில் ஈடுபட்ட
தலைவனும் தலைவியும் முதன்முதலாக
பிரிந்து செல்லும்போது இருக்கும் மனநிலை
எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல
வந்ததுதான் இந்தக் குறள்.

தலைவியை விட்டுப் பிரிந்து
செல்ல வேண்டிய நிலைமைக்கு உள்ளாகிறான்
தலைவன். பொருள் ஈட்ட வேண்டிய
நிர்ப்பந்தம் .

என்ன செய்வது? 
தலைவியிடம் சொல்லிவிட்டுப் போக
வேண்டும் என்று நினைக்கிறான்.
மெதுவாக தன் நிலைமையை
எடுத்துக் கூறி, வேலை முடிந்த உடனே
விரைவாக வந்துவிடுவேன் என்கிறான்.

தலைவிக்குத் தலைவனைப் பிரிந்து
இருக்க மனமில்லை.
ஆனாலும் செல்ல வேண்டாம் என்று
முட்டுக்கட்டைப் போட்டு பேசவும் முடியவில்லை.
அதனால், "பிரியேன் என்றால்
என்னிடம் சொல்... "என்று கூறினாள்.
அதோடு விட்டுவிடவில்லை.
"பிரிந்து செல்ல வேண்டும் என்றால்
நான் தடுக்கவில்லை. ஆனால் விரைவில்
வந்துவிடுவேன் என்பதை
நீ வரும்வரை யார் உயிரோடு இருப்பார்களோ
அவரிடம் சொல்" என்று சொல்லி
கண்களைக் கசக்கி நின்றாள்.

அதாவது நீ பிரிந்து சென்றால்
நான் உயிர் வாழ மாட்டேன் 
என்பதைத்தான் தலைவி இவ்வாறு
கூறுகிறாள்.
பிரிந்து போய் விரைந்து வருவேன்
என்று சொல்வீராயின் அதுவரை
உயிரோடிப்பவரிடம் வந்த பின்னர்
சொல்லிக் கொள்ளுங்கள்.
பிரிவு தவிர்க்க முடியாதது.
வினையே ஆடவர்க்கு உயிரே 
என்பார்கள்.
பொருள் தேட பிரிந்துதான் ஆக வேண்டும். 
ஆனால் பிரிவைத் தாங்க முடியாததால்
வாழ்த்தி அனுப்பி வைக்க முடியாத
 நிலைமையில் இருக்கிறாள் தலைவி.
 இல்லற வாழ்வில் இணைந்தவர்கள்
 பிரிவைச் சொல்வதுபோல இந்தக் குறள்
 அமைந்துள்ளது.

English couplet : 

"If you say , ' I leave thee not '  then tell me so, Of quick
return tell those that can survive this woe"

Explanation :

If it is not departure, tell me ; but if it is your speedy
return, tell it  to those who would be alive then.

Transliteration :

"Sellaamai untel Enakkurai Matrunin
Valvaravu vaazhvaark kurai "




Comments

Popular Posts