தெய்வம் தொழாஅள் கொழுநன்....
தெய்வம் தொழாஅள் கொழுநன்....
"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை "
குறள் : 55
தெய்வம் - கடவுள்
தொழாஅள் - தொழாதவள்
கொழுநன் - கணவன்
தொழுது - வணங்கி
எழுவாள் - எழுந்திருப்பவள்
பெய் - பொழிவாயாக
என - என்று சொல்ல
பெய்யும் - பொழியும்
மழை - மழை
வேறு எந்தத் தெய்வத்தையும் தொழாமல்
தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு
தொழுது துயில் எழுகிறவள் பெய் என்று
கட்டளையிட்டால் மழை பெய்யும்.
விளக்கம் :
வள்ளுவர் எந்த தெய்வத்தையும் வணங்க
வேண்டாம். கணவனை மட்டுமே தொழுதால்
போதும் என்று சொல்லிவிட்டாரா ?
அது எப்படி திருவள்ளுவரால் சொல்லமுடியும் ?
கடவுள் வாழ்த்து எழுதும்போது வள்ளுவர்,
"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"
என்று சொல்லியிருக்கிறார்.
அதாவது கடவுளின் திருவடிகளை வணங்காத
தலைகள் உறுப்புகளை க் கொண்டிருப்பினும்
உணர்வில்லாதவையாகவே கருதப்படும்
என்று சொன்ன வள்ளுவர் எப்படி
கடவுளை வணங்க வேண்டாம் என்று
கூறியிருப்பார்.
ஒருபோதும் அப்படி கூறியிருக்க வாய்ப்பே இல்லை.
நாள்தோறும் வழிபட்டு வரும் தெய்வத்தையே ஒருகால்
தொழாமல் போகும் சூழல் ஏற்பட்டாலும்
எழுந்ததும் கணவனைத் தொழும் பெண்
பெய் என்று சொன்னால் மழை பெய்யுமாம்.
அதாவது அவள் சொன்னது நடக்கும்
என்பதுதான் பொருளாக இருக்கும்.
இக்குறள் பல்வேறு மாறுபட்ட சிந்தனையாளர்கள்
எண்ணத்தில் மாறுபட்ட கோணத்தில்
இருப்பினும் பழைய உரையாசிரியர்கள்
உரை தெய்வத்தைத் தொழாதவளாய் தன்
கணவனையே வணங்கி எழுகின்றவள்
பெய் என்று சொன்ன உடன் மழை பெய்யும்
என்பதாகவே உள்ளது.
காலத்திற்கு ஏற்ப சிலருக்கு முரண்பாடாகத்
தெரியலாம்.
பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளப்பட்ட
பொருள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
English couplet :
"No God adoring, low she bends before her lord, Then rising
serves ,the rain falls instant at her word"
Explanation :
If she, who does not worship God, but who rising worships
her husband say , "let it rain, " it will rain.
Transliteration :
"Theyvam thozhaaal kozhunan thozhudhezhuvaal
Peyyenap peyyum mazhai "
Comments
Post a Comment