எய்தற் கரிய இயைந்தக்கால்.....
எய்தற் கரிய இயைந்தக்கால்....
எய்தற் கரிய இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல் "
குறள் :. 489
எய்தற்கு- அடைவதற்கு
அரிய - அருமையான(காலம்)
இயைந்தக்கால்- வாய்ப்பாக அமைந்தால்
அந்நிலையே -அந்தப் பொழுதே
செய்தற்கு- செய்வதற்கு
அரிய - அருமையான செயல்கள்
செயல்- செய்து முடிக்க
கிடைப்பதற்கு அரிய காலம் வாய்ப்பாக
அமையுமானால் அந்தப்பொழுதே
அதனைப் பயன்படுத்திக் கொண்டு
செய்வதற்கு அருமையான செயல்களைச்
செய்து முடிக்க வேண்டும்.
விளக்கம்:
ஒரு செயலைச் செய்வதற்கு ஏற்ற
காலம் வாய்ப்பாக வந்து
அமையும்போது அதனை
விட்டுவிடக்கூடாது. உடனே
பெறுதற்கு அரிய காலம் இதுதான்
என்பதை உணர்ந்து அந்தப்பொழுதே
செயலில் இறங்கி வேலை செய்ய
வேண்டும்.
காலம் நில்லாது.
வாய்ப்பும் மறுபடியும்
அமையாது. பின்னால் இப்படி ஒரு வாய்ப்பு
அமையவும் செய்யலாம்.
அமையாமலும் போகலாம்.
அதனால் குறித்த காரியத்தை
வாய்ப்புக் கிடைத்த
அந்தப் பொழுதே செய்து
முடித்துவிடுக.
காலம் பார்த்துக் காத்திருப்பது எவ்வளவு
இன்றியமையாததோ அது போன்றதுதான்
வந்த வாய்ப்பை உடனே
பயன்படுத்திக் கொள்வதும்
மிகவும் முக்கியமானது.
அப்போதே அந்த நேரத்திலேயே
செயலில் இறங்கினால் செயற்கரிய
செயல்களைச் செய்தவர்கள்
என்ற பெருமை நம்மை வந்து சேரும்.
ஆதலால் காலத்தோடு வந்து
சேரும் வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்.
காலமும் வாய்ப்பும் கைகூடி
வரும்போதுதான் செயற்கரிய செயல்கள்
நிகழ்த்த முடியும்.
நினைத்த காரியமும் வெற்றிகரமாக
நடைபெறும்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
என்பதுபோல "கிடைத்த நல்ல நேரத்தையும்
வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்க.
செயற்கரிய செயல்களைச் செய்தவராகுக"
என்கிறார் வள்ளுவர்.
English couplet:
"When hardest gain of opportunity at last is won,
With promtitude let hardest deed be done "
Explanation :
If a rare opportunity occurs while it lasts
let a man do that which is rarely to be
accomplished (but for such an opportunity)
Transliteration :
"Eydhar kariyadhu lyainfhakkaal annilaiye
Seydhar kariya seyal"
Comments
Post a Comment