வெள்ளிவிழா வாழ்த்து

        வெள்ளிவிழா வாழ்த்து

   வெள்ளிவிழா நினைவுகள்
     நெஞ்சினில் அசை போட
     பொன்விழா நாட்களை 
     மனம் எதிர்பார்த்திருக்க
     மணிவிழா மகுடம் சூட்ட
     கரம் நீட்டி வரவேற்றிருக்க
     நூற்றாண்டுவிழா வாய்ப்பு
     வரமாய் அமைந்திட
     நாளெல்லாம் உவகையும்
     விழாக்கால மகிழ்ச்சியும்
     இல்லத்தில் தங்கி
     இனிய கூட்டாட்சி நடத்திட
     இதயம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்
     வாழ்க நூறாண்டு....
     நுவலரு நலங்களை
     அள்ளிக் கொண்டு!
      
      
     
      

Comments