ஊக்க முடையான் ஒடுக்கம்.....


ஊக்க முடையான் ஒடுக்கம்.....


ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து "


                    குறள் :.     486


ஊக்கம் - மன உறுதி
உடையான் - உடையவன் 
ஒடுக்கம் - ஒடுங்கியிருப்பது
பொரு - சண்டை,போர்
தகர் - ஆடு ,கிடா
தாக்கற்கு. தாக்குவதற்காக 
பேரும் - பின்னாகக் கால் பெயரும்
தகைத்து -தன்மையதாகும்


பொருள்:

மன உறுதி உடையவர்கள் கொடுமைகளைக்
கண்டும் அடங்கியிருத்தல் ஆட்டுக்கடாவானது
 தனது பகையைத் தாக்குவதற்கு முன்னர்
தன் கால்களைப் பின்வாங்குவதற்கு
ஒப்பாகும்.

விளக்கம்:

எந்த அநீதியையும் தட்டிக் கேட்கும்
துணிச்சல் ஒரு சிலரிடம் இருக்கும்.
அப்படி இருந்தும் தங்களுக்கு எதிராக
நடக்கும் அநீதியை தட்டிக்
கேட்காது அமைதியாக இருப்பர்.
அதற்குக் காரணம் அச்சம் என்று
தவறுதலாக எண்ணிவிட வேண்டாம் .
சிலரின் அமைதிக்குப் பின்னால்
ஏதோ ஒரு திட்டம் இருக்கும்.
சரியான நேரம் பார்த்துத்
தாக்குவதற்குதான் காத்திருப்பர்.
தன்னால் முடியும். அப்படியிருந்தும்
திருப்பியடிக்காமல் பின்வாங்குவது 
எதைப் போன்று இருக்கிறது என்றால்
 சண்டைக்காக வளர்க்கப்பட்ட 
 ஆட்டுக் கடாவானது
மோதுவதற்கு முன்பாக கால்களைப் 
பின்வாங்குவது போன்றது.


கிடா கால்களைப் பின்வாங்கிய பின்னர் 
முரட்டுத்தனமாக முன்னோக்கி 
ஓடிவந்து எதிரியை முட்டி வீழ்த்தும்.
அதுபோன்று ஊக்கம் உடையவர் 
பதுங்கி இருந்து பருவம் பார்த்து
வலிமையோடு திருப்பித் தாக்குவர்.

"மன எழுச்சி உடைய ஒருவன்
ஒடுங்கி இருப்பது ஆட்டுக்கிடா 
எதிர் ஆட்டுமீது பாய்வதற்கு
முன்னர் வலியேற்றும் பொருட்டு 
கால்வாங்குவதற்கு ஒப்பாகும்" என்கிறார்
வள்ளுவர்.English couplet :

The men of mighty power their hidden energies repress
As fighting ram recoils to rush on foe with heavier stress.


Explanation :

The self restraint of the  energitic while waiting for a suitable 
opportunity is like the drawing back of a fighting ram
in order to butt.

Transliteration 

"Ookka mutaiyaan otukkam porudhakar
Thaakkarkup perun thakaiththu"

Comments

Popular Posts