உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின்.....

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின்....


உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்"

                                    குறள்: 473


உடைத்தம் -தம்மிடம் இருக்கக்கூடிய
வலி - வலிமை
அறியார் - அறியாதவர் 
ஊக்கத்தின் - ஆர்வ மிகுதியால்
ஊக்கி-  செயலைத் தொடங்கி 
இடைக்கண்-இடையிலேயே
முரிந்தார் -அழிந்தார், நொடிந்தார்
பலர்-பலராவர்


தமது வலிமை இவ்வளவுதான் என்பது
அறியாமல் ஆர்வ மிகுதியால் ஒரு செயலைச்
செய்யத் தொடங்கி  ,இடையிலேயே
அதை முடிக்க  முடியாமல்  அழிந்து
போனவர் பலர் 

விளக்கம் :

நம்மிடம் இருக்கும்  ஆற்றல் 
எவ்வளவு என்பது நமக்கு மட்டுமே
தெரியும். எனினும் பல நேரங்களில்
அதனைப்பற்றிய சிந்தனையே இல்லாமல்
ஆர்வம் மேலிட ஒரு செயலைச் செய்யத்
தொடங்கிவிடுவோம். தொடர்ந்து அந்தச்
செயலைச் செய்யத் தெரியாமல் தடுமாற்றம்
வந்துவிடும்.

தொடங்கியபோது இருந்த ஆர்வம்
சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வரும்.
அடுத்தது என்ன என்ற கேள்வி எழும்போது
விடை தெரியாது விழிப்போம்.
இனி என்ன செய்வது?

என்னால் இயலாது என்ற முடிவுக்கு வந்து
அந்தச் செயலை இடையிலேயே 
முடித்துக்கொள்வோம்.ஒரு செயலைத்
தொடங்கும்போதே என்னால்
இதனைச் செய்ய முடியுமா? என்ற கேள்வியை
எழுப்பி, என்னால் கூடும் என்ற
நம்பிக்கை இருந்தால் மட்டுமே
செய்யத் தொடங்க வேண்டும்.
உணர்ச்சி மேலிட தொடங்கும் செயல்கள்
இறுதிவரை நடப்பதில்லை.
ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்னால்
இடையில் என்னென்ன இடையூறுகள்
ஏற்படும்? எந்தெந்த வழிகளில் முட்டுக்கட்டைகள்
வரும்? அதனை எல்லாம் சமாளித்து
என்னால் இதனைச் செய்து முடிக்க முடியுமா?
இப்படி பல கோணங்களில்
ஆராய்ந்த பின்னரே செயலில் இறங்க
வேண்டும்.
நமது வலிமைக்கு ஏற்ப செயல்கள்
இருக்க வேண்டும். 
 முரிந்தார் பலர் என்று வள்ளுவர்
கூறியுள்ளதால் மன உந்துதலால்
செய்யப்படும் பெரும்பாலான செயல்கள்
வெற்றியில் முடிவதில்லை.
அழிவைத்தான் தரும் 
என்பதை உறுதிபடக் கூறியுள்ளார்.

ஒரு செயலைச் செய்யும் முன்னர்
திறனறி ஆய்வு செய்து 
அதன் பின்னர் செயலில் இறங்குங்கள் .
ஆழம் தெரியாமல் காலை விட்டு
சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
இதுதான் இந்தக் குறள் கூறும் செய்தி.

English couplet:

"Ill dealing of their proper powers, have many monarchs striven
And midmost of unequal conflict fallen asunder riven "


Explanation:

There are many who ignorant of their power have
haughty set out of war ,and broken down
in the midst of it.

Transliteration:

"Utaiththam valiyariyaar ookkaththain ookki
Idaikkan murindhaar palar"


.








Comments

  1. குறளோடு சேர்ந்த விளக்கமும் பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts