சள்ளை என்றால் என்ன?

 சள்ளை என்றால் என்ன?


ஒரே சள்ளையாக இருக்கிறது 
என்று ஊர்ப்பக்கம் பேசத் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
அடிக்கடி சண்டையிட்டால் ஏன் சள்ளுசள்ளுன்னு
நிற்கிறாய்  ? என்று எரிச்சலோடு கேட்பதுண்டு.

வள்ளு வள்ளுன்னு நிற்கறா?
சள்ளு சள்ளென்று 
எரிஞ்சிகிட்டு நிற்குறா
இவை எல்லாம் பேச்சு வழக்குச் சொற்கள்.

இவை இரட்டைக்கிளவியா?
அடுக்குத்தொடரா? என குழம்பும்படியாக
இருக்கும்.


இரட்டைக் கிளவி என்றால் பிரித்தால்
பொருள் தராது.

இங்கு இந்தச் வள்ளு வள்ளு 
பிரித்தாலும் பொருள் தரும்.
வள்ளுன்னு சாடாத?
என்று ஒற்றையாகவும் சொல்லுதல்
உண்டு.
ஆதலால் அது இரட்டைக் கிளவி அல்ல
என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால் சள்ளு என்ற  சொல்லுக்குப் 
பொருள் தெரியாது.
பொருள் தெரியாமல் இருந்தாலும்
 சரியாக அச்சொற்கள்
எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ
அந்த இடத்தில்தான் பயன்படுத்தியிருக்கிறோம்.
அப்படியானால் அந்தப் சொற்களைப் பற்றிய
புரிதல் நம் அடிமனதில் எங்கோ 
பதிந்து போயிருக்கிறது.
ஆனால் அதன் பொருளை வெளிப்படுத்தத் 
தெரியவில்லை. பொருள் புரிய
வைக்க முடியவில்லை.

சள்ளை என்ற சொல்லை
மறுபடியும் மறுபடியும் தொந்தரவு  செய்தல்,
தொல்லை போன்ற பொருள்களில்தான்
பயன்படுத்தி வந்திருக்கிறோம்.
அதுதான் அந்தச் சொல்லின் பொருள்.

இப்போது நாம் பேசும் சள்ளைக்கான 
பொருள் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


சள்ளை என்பது ஒருவகை மீன்.
என்கிறார். சாளை மீன்தான் 
சள்ளை மீனாக இருக்குமோ
என்ற ஐயம் எனக்கு உண்டு.
காரணம் 
சாளை மீன் அகப்பட்டால்
 ஒரே நேரத்தில்
நிறைய கிடைக்குமாம்.
பொலுபொலுவென்று ஒரே நேரத்தில்
நிறைய அகப்படுவதால்தான் அதற்கு
சாளை அல்லது பிள்ளை மீன்
 என்ற பெயர் வந்திருக்கலாம்
என்று நினைக்கிறேன்.
ஆனால் பிள்ளை மீன் என்றால்
ஒருவகைப் சிறிய மீன் என்று
கூறுகிறார்கள்.


Comments

Popular Posts